» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஸ்ட்ரைக்: கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

செவ்வாய் 12, டிசம்பர் 2017 12:15:09 PM (IST)தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

1.1.17 முதல் நடைபெற வேண்டிய ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். 2வது ஊதியக் குழுவில் விடுபட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். துணை டவர் நிறுவனம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல்  ஊழியர்கள், அதிகாரிகள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்றும் நாளையும் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையொட்டி, தூத்துக்குடியில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்து தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் லிங்கபாஸ்கர் தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் பழனிகுமார், சண்முகம், ராஜன், செல்வபெருமாள், ஜெகதீஷ் செல்வகனி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.  ஆர்ப்பாட்டத்தில் ஊழியர் சங்க நிர்வாகிகள் ஜெயமுருகன், பாலகண்ணன், மரிய அந்தோணி பிச்சை, சரவணன், சுரேஷ் காந்தி, செல்லதுரை, செல்வபெருமாள் மற்றும் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள்,  ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

வேலை இல்லாதவன்Dec 13, 2017 - 05:17:10 PM | Posted IP 103.2*****

நான் நல்ல வேலை இல்லாமல் இருக்கிறேன் , சும்மா தான் இருக்கேன் , இவர்கள் எல்லாம் வேற ...

பொதுமக்கள்Dec 12, 2017 - 06:30:28 PM | Posted IP 122.1*****

உங்களுக்கு கொடுக்கும் சம்பளம் ஒரு தண்டம் இதில் வேற போராட்டம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored AdsNew Shape Tailors


Universal Tiles Bazar
selvam aqua


Johnson's Engineers

Thoothukudi Business Directory