» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உணவு பொருளில் கலப்படங்களை கண்டறிவது எப்படி? அன்னம்மாள் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வியாழன் 14, டிசம்பர் 2017 4:47:56 PM (IST)தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் நுகர்வோர் கழகம்  சார்பில்  உணவில் உள்ள கலப்படங்களை கண்டறிவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. 

தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் நுகர்வோர் கழகம் சார்பாக தமிழக அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் போதைமருந்து நிர்வாகத்துறையின் உணவு பாதுகாப்பு அங்கத்துடன் இணைந்து கல்லூரி மாணவியருக்கான "உணவுக் கலப்படம்” குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில்  கல்லூரி துணை முதல்வர் சூரியகலா வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட  உணவு பாதுகாப்பு மருத்துவர் தங்க விக்னேஷ் தொடக்க உரை நிகழ்த்தினார். இதில் உணவு உரிமம் பெறுவது மற்றும் பதிவுமுறைகளை விளக்கினார். 

இதைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறையின் தொழில்நுட்ப உதவி இயக்குனர் லாரன்ஸ் உணவு பாதுகாப்பும் கேடுகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார். தொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் சந்திரமோகன் இருவரும் உணவில் உள்ள கலப்படங்களை எவ்வாறு கண்டு கொள்வது என்பதைக் குறித்து விளக்கினர். மேலும் உணவு பொட்டலங்கள் மற்றும் லேபிள் செய்யும் முறைகளையும் விளக்கினர். கல்லூரி நுகர்வோர் கழக திட்ட அலுவலர் உதவிப்பேராசிரியர் சுதாகுமாரி இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
மக்கள் கருத்து

selviDec 14, 2017 - 06:43:42 PM | Posted IP 122.1*****

வெரி சூப்பர்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

New Shape TailorsJohnson's Engineers


Universal Tiles Bazarselvam aquaThoothukudi Business Directory