» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வியாழன் 14, டிசம்பர் 2017 5:07:30 PM (IST)வடமாநில தொழிலாளர்களை பயன்படுத்துவதை தவிர்த்து, உள்ளுர் தொழிலாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த 10 மாதமாக அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்காததைக் கண்டித்தும், போலி மது பானங்களை ஒழிக்க வேண்டும், கோவில்பட்டியில் உள்ள தொழிற்சாலைகளில் வடமாநில தொழிலாளர்களை பயன்படுத்துவதை நிறுத்தி, உள்ளுர் தொழிலாளர்களை பயன்படுத்த வேண்டும், தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், தமிழகத்தில் எடுக்கப்படும் மணல் தமிழகத்தில் மட்டுமே பயன்படுத்தபட வேண்டும், வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லக்கூடாது, என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  கோவில்பட்டியில்  பயணியர் விடுதி முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி, மாவட்ட செயலாளர் தமிழரசன் தலைமை வகித்தார். ஐ.என்.டி.யூ.சி பொது செயலாளர் ராஜசேகரன், அண்ணா தொழிற்சங்கம் தாலூகா செயலாளர் ராமகிருஷ்ணன், டி.யூ.சி.சி மாவட்ட பொது செயலாளர் பொன்.இருளாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தினை கட்டிட தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பரமசிவம் தொடங்கி வைத்தார். ஏ.ஐ.சி.சி.டி.யூ மாவட்ட செயலாளர் பொன்ராஜ், எப்.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் சங்கரன், தமிழ் மாநில கட்டிட தொழிலாளர் சங்க மாநில தலைவர் செண்பகசுப்பு, ஐ.என்.டி.யூ.சி. போக்குவரத்து தொழிலாளர் சங்கம் ராமர், பஞ்சாலை தொழிலாளர் சங்கம் ராமமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். ஐ.என்.டி.யூ.சி. மாநில செயல் தலைவர் கதிர்வேல் நிறைவுரையாற்றினார். இறுதியில் எம்.எல்.எப் தலைவர் குழந்தைவேல் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Universal Tiles Bazar


selvam aquaNew Shape Tailors

Johnson's Engineers
Thoothukudi Business Directory