» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஓட்டப்பிடாரம் அருகே ஒருவர் கொலை : 2 பேர் சிக்கினர்

வியாழன் 14, டிசம்பர் 2017 5:31:20 PM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே சவரிமுடி விற்பனை செய்தவர் படுகொலை செய்யப்டப்டார்.  இது தொடர்பாக 2பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நெல்லை அருகே பேட்டையில் குடியிருந்து வரும் ஒரு பிரிவினர் ஊர் ஊராக கூடாரம் அமைத்து தங்கி சவரி முடி விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு அங்கிருந்து 10க்கும் மேற்பட்டவர்கள் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குலசேகரநல்லூருக்கு ஒரு குழுவாக வந்தனர். ஊருக்கு வெளிப்புறத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர். தினமும் காலையில் ஊர்ஊராக செல்லும் இவர்கள் இரவில் சவரி முடி விற்பனையில் கிடைத்த பணத்தை கணக்கு பார்த்து பங்கிடுவது வழக்கம். அவ்வாறு நேற்று பங்கீடு செய்யும் போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இன்று அதிகாலை 1மணி அளவில் அவர்கள் 10பேரும் இரு குழுக்களாக பிரிந்து மோதிக் கொண்டனர். 

இதில் ஒருவருக்கு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் யார் என்ற அடையாளம் தெரியவில்லை. அவருக்கு சொந்தமான பைக் அருகில் கிடந்தது. இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 2பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். தப்பியோடிய 2பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஓட்டப்பிடாரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

selvam aqua


Johnson's EngineersNew Shape Tailors

Universal Tiles Bazar

Thoothukudi Business Directory