» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புனித மரியன்னை பெண்கள் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

வியாழன் 14, டிசம்பர் 2017 6:00:29 PM (IST)நாசரேத் அருகில் உள்ள கச்சனாவிளை புனித மரியன்னை பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது.

குரும்பூர் பங்குத் தந்தை அமல்ராஜ் தலைமை வகித்து கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினார் பள்ளி தாளாளர் நான்சிமேரி, தலைமை ஆசிரியை விமலா மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவிகளின் நடனம், நாடகம், கிறிஸ்து பிறப்பு பற்றிய நாடகம் மற்றும் பல்வேறு கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஆசிரியைகள், அலுவலர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவி முனீஸ்வரி வரவேற்றார். நிறைவாக மாணவி மாரிசெல்வி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

selvam aquaNew Shape Tailors


Johnson's Engineers

Universal Tiles Bazar

Thoothukudi Business Directory