» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்துார் கோவில் விபத்திற்கு காரணம் என்ன ? முழு பின்னணி தகவல்கள்

வியாழன் 14, டிசம்பர் 2017 8:37:46 PM (IST)திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் கிரி பிரகார மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவத்தில் பின்னணி தகவல்கள் தெரிய வந்துள்ளது.

உலக அளவில் பிரசித்தி பெற்ற முருகனின் இரண்டாம் படைவீடான திருச்செந்துாரில் வெளிப்பிரகார மேற்கூரை இடிந்து விழுந்தது.இது பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் கிரிபிரகாரம் பிரபல சினிமா தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்ப தேவர் உபயமாக கட்டி கொடுத்தது. சுமார் 43 ஆண்டுகள் பழமையான கிரி பிரகாரத்தின் இருபுறமும் தூண்களால் அலங்கரிக்கும். இதில் வள்ளிகுகைக்கு எதிர்புறம் வடக்குவாசல் பக்கத்தில் வடக்கு மற்றும் தெற்கு கிரி பிரகாரம் சந்திக்கும் இடம் தான் இறக்கமாக காணப்படும். இந்த பிரகாரத்தின் மேல் பகுதியில் மழை பெய்தால் கோயில் மேல்தளத்தின் தேங்கும் மழைநீர் இந்த கிரி பிரகாரத்தின்  மேற்கூரை பகுதியில் தான் அருவியாக கொட்டும். 

இந்த ஆண்டு கடந்த சில முன்பு பலத்த மழை பெய்ததால் இந்த பகுதியில் நல்ல மழைநீர் தேங்கி நீர் கசிந்து கொண்டே இருந்துள்ளது. இப்பகுதியில் நீர் கசிவால் மேற்கூரை பலமிழந்து காட்சியளித்தது. நேற்றுகாலையில் அதிர்ஷ்டவசமாக எப்போதும் பக்தர்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வழக்கத்தை விட குறைவான பக்தர்களே இருந்தனர். திடீரென பலமிழந்த மேற்கூரை திடீரென அப்படியே கீழே விழுந்தது. இதனால் அப்பகுதியில் மோர் விற்ற கொண்டிருந்த பேச்சியம்மாள் சிக்கி கொண்டார். மேலும் இருவர் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் தப்பித்தனர். இக்கோயில் வளாகத்தில் முக்கிய கட்டிடங்களான திருவாவடுதுறை சஷ்டி மண்டபம், ஜெயந்திநாதர் விடுதி, ஆறுமுக விலாச பகுதி ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


selvam aqua

Universal Tiles BazarNew Shape TailorsJohnson's EngineersThoothukudi Business Directory