» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்துாரில் இடிந்த பிரகாரம் உடனே கட்டப்படும் : அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேட்டி

வியாழன் 14, டிசம்பர் 2017 8:44:30 PM (IST)திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இடிந்த சுற்றுபிரகாரம் உடனடியாக கட்டப்படும் என தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கிரி பிரகார மண்டபத்தில் வடக்கு வாசல் அருகே உள்ள கிரிபிரகாரம் மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த இடத்தை தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நேற்றுமாலை பார்வையிட்டார். அப்போது இடிந்து விழுந்த கட்டிடத்தின் வரைபட நகலையும் பார்த்தார். பின்னர் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுமார் 45 ஆண்டுகள் பழமையான சுற்று பிரகாரத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. 20 மீட்டர் நீளமும் 15 அடி அகலத்திற்கு இந்த மேற்கூரை இடிந்தது. கடந்த 29ம் தேதி இந்த சுற்று பிரகாரத்தை ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில் திடீரென சில தவறுகள் காரணமாக இந்த மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த மேற்கூரை இடிந்து விழுவதற்கு இந்த பகுதி கடற்கரை அருகே இருப்பதால் உப்பு காற்றினாலும், காற்று உள்வாங்கியதாலும் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. 

இனி தவறு நடக்காத வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் கட்டிட பணிகள் ஆய்வு செய்ய உத்தரவிடப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகத்தின் போது புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றது. திருச்செந்தூர் கோயிலில் சுற்று பிரகாரத்தையும் முழுமையாக அகற்றிவிட்டு உடனடியாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சருடன் தமிழக அறநிலையத்துறை ஆணையர் ஜெயா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள், திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் பாரதி, நெல்லை மண்டல இணை ஆணையர் பரஞ்ஜோதி, திருச்செந்தூர் ஆர்.டி.ஒ. கணேஷ்குமார், தாசில்தார் அழகர் டவுன் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி மனோரஞ்சிதம் ஆகியோர் உடன் இருந்தனர். இதற்கிடையே இறந்த போன பேச்சியம்மாள் உடலுக்கு அரசு ஆஸ்பத்திரியில் வைத்து அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். 

அப்போது பேச்சியம்மாளின் உறவினர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் குவிந்திருந்தனர். அவர்கள் அமைச்சர் முற்றுகையிட்டு, இறந்த போன பேச்சியம்மாளின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம், படிப்பு செலவு, அரசு வேலை ஆகியவை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது அவர்களிடம் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியாக இறந்த பேச்சியம்மாளின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்குவதற்கான ஆணை மற்றும் இறுதி சடங்கிற்கு ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை அமைச்சர் வழங்கினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

selvam aqua


Johnson's EngineersUniversal Tiles Bazar


New Shape Tailors
Thoothukudi Business Directory