» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மதுவிலக்கு புகாருக்கு கட்டணமில்லா தொலைபேசி சேவை: எஸ்பி மகேந்திரன் தகவல்

வெள்ளி 15, டிசம்பர் 2017 10:58:56 AM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிலக்கு தொடர்பான புகார்களை தெரிவிக்க 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக எஸ்பி மகேந்திரன் தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு காவல்துறை சார்பில் மதுவிலக்கு புகார்கள், தகவல்கள், தடுப்பு நடவடிக்கைள் குறித்து பொதுமக்கள் தெரிவிக்க கட்டணமில்லா டோல்ப்ரி டெலிபோன் எண் 10581 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வு மற்றும் மதுவிலக்கு குற்றங்கள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க வசதியாக பழைய பஸ் நிலையத்தில் மதுவிலக்கு போலீஸ் சார்பில் தகவல் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இதன்படி தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் மதுவிலக்கு புகார் தொடர்பான கட்டணமில்லா தொலை பேசி எண் குறித்த தகவல் பலகையை எஸ்பி மகேந்திரன் திறந்து வைத்தார். பின்னர் அங்கிருந்த மக்களிடம் இது தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் எஸ்பி மகேந்திரன் கூறுகையில், ‘‘மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் குறித்த புகார்கள், அதாவது குறித்த நேரத்திற்கு முன்போ அல்லது பின்னரோ இயங்குவது போன்றும், வெளி மாநிலங்களில் இருந்து மதுவகைகள் கொண்டு வந்து விற்பனை செய்தல், சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சுதல், எரிசாராயம் போன்றவை பதுக்குதல், கடத்தல் போன்றவை குறித்து பொதுமக்கள் தகவல் தரலாம். 

இதற்காக மாவட்ட எஸ்பியை 9498195222, ஏடிஎஸ்பி 9498195222, மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் 9442445751 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். மேலும் இதற்காக 24மணி நேர டோல் ப்ரி எண் 10581 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை எவ்வித கட்டணமும் இன்றி பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் தரலாம். அவர்களின் தகவல் ரகசியம் காக்கப்படும் என்றார். நிகழ்ச்சிக்கு மதுவிலக்கு ஏடிஎஸ்பி கந்தசாமி, இன்ஸ்பெக்டர் இசக்கிமுத்து முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மதுவிலக்கு போலீஸ் ஏட்டுகள் வீரபாகு, திரவியம், அங்கப்பன் மற்றும் மத்தியபாகம் போலீசார் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

சாமான்யன்Dec 15, 2017 - 10:23:50 PM | Posted IP 157.5*****

குற்ற செயல்கள் சரி செய்ய விழிப்புணர்வு தேவை. ஆனால் குற்றவாளிகள் அடையாளம் காணப்படுவதும், பிடிபடுவதும் குறைவாக உள்ளது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

New Shape Tailorsselvam aqua

Johnson's EngineersUniversal Tiles Bazar
Thoothukudi Business Directory