» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ஆர்டிஓ அலுவலகத்தில் சர்வர் பழுது: கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு

வெள்ளி 15, டிசம்பர் 2017 12:47:01 PM (IST)தூத்துக்குடி ஆர்டிஓ அலுவலகத்தில் 5 நாட்களாக நீடிக்கும் சர்வர் பழுது காரணமாக, பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

துறைமுக நகரான தூத்துக்குடியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தினமும், வாகனம் ஓட்ட பழகுனர் உரிமம், வாகன உரிமம், உரிம புதுப்பிப்பு வாங்குவது, வாக­னங்களுக்கு எண்களை பதிவு செய்வது, தகுதி சான்று வாங்கு­வது என, பல பணிகள் நடக்­கின்­றன. காலை 9 மணி முதல், வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் வருவதால் எப்போதும் பிசியாக இருக்­கும். இப்பணிகள் அனைத்தும் கம்ப்யூட்டர் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், கடந்த 10ம் தேதி, அலுவலகத்தில் இருந்த "சர்வர்" செயலி­ழந்தது. 

இதனால், அலுவலகப் பணிகள் ஸ்தம்பித்தன. கடந்த 5 நாட்களில் 200 லாரிகள் எப்சி  பெற முடியவில்லை. மேலும், சுமார் 500 வாகனங்களுக்கு ரிஜிட்ரேஷன் செய்ய முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். டூரிஸ்ட் வேன்கள், லாரிகள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் பதிவு செய்ய முடியாமல், தகுதி சான்று பெறமுடியாமல் ஓரங்கட்டி நிறுத்தி வைக்கும் நிலை ஏற்பட்டது. இதனால், வாகன உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அசோசியேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ஏராளமான ஷிப்பிங் நிறுவனங்கள் உள்ளது. துறைமுகத்தில் இருந்து சரக்கு போக்குவரத்திற்கு தினமும் நூற்றுக் கணக்கான லாரிகள் பயன்படுத்தப்படுகிறது. 

ஆனால், ஆர்டிஓ அலுவலகத்தில் சர்வர் பழுதால், உரிய நேரத்தில் எப்சி பெற முடியாமல் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அரசுக்கும் இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதுபோல் மாதத்தில் 10 நாட்களுக்கு சர்வர் பழுது ஏற்பட்டு, பணிகள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். அவரது வருகைக்கு முன்னதாக 5 நாட்களும், வருகைக்கு பின்னர் 5 நாட்களும் தூத்துக்குடி ஆர்டிஓ அலுவலகத்தில வேறு எந்த வித பணிகளும் நடைபெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதல்வர் வருகைக்கான வாகன பணிகளை மேற்கொண்டதால், அதிகாரிகள் வேறு பணிகளில் கவனம் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. 


மக்கள் கருத்து

Tony FernandoDec 15, 2017 - 07:34:32 PM | Posted IP 157.5*****

Good work officer

ஒருவன்Dec 15, 2017 - 05:53:51 PM | Posted IP 117.2*****

அது மட்டுமல்ல RTO ஆபீஸ் போகும் வழியெல்லாம் ரோடு சரியில்லை

சசி குமார்Dec 15, 2017 - 03:00:10 PM | Posted IP 110.1*****

பலர் பாதிக்கப்பட்டுள்ளதால் விரைவாக சர்வர் ஐ சரி செய்யவும் .

karthick rajaDec 15, 2017 - 02:06:40 PM | Posted IP 168.2*****

Hi

ராமநாதபூபதிDec 15, 2017 - 12:54:30 PM | Posted IP 103.3*****

இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

New Shape Tailors


Johnson's Engineers

selvam aqua

Universal Tiles BazarThoothukudi Business Directory