» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திமுக வெற்றியை சீர்குலைக்க ஆளும் கட்சி முயற்சி: என்.ஆர்.தனபாலன் குற்றச்சாட்டு

வெள்ளி 15, டிசம்பர் 2017 4:27:01 PM (IST)ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வெற்றியை சீர்குலைக்க ஆளும் கட்சி முயற்சி செய்து வருவதாக பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் குற்றம்சாட்டினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வெற்றி உறுதி, திமுகவின் வெற்றியை சீர்குலைக்கும் வகையில் இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ். துலைமையிலான அரசு செயல்பட்டு வருவதாகவும், ஆளும் கட்சி அரசு இயந்திரங்களை கொண்டு மக்கள் விலைக்கு வாங்க முயற்சி செய்து வருவதாகவும், கடந்த தேர்தலின் போது எதற்காக தேர்தல் நிறுத்தப்பட்டதோ, அதை விட தற்போது அதிகளவு பணம் கொடுக்கப்பட்டு வருகிறது. 

தேர்தல் ஆணையம் பெயரளவில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஓகி புயல் பாதிக்கப்பட்டவுடன் கேரளா முதல்வர் பிரனாய்விஜயன் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டார்.ஆனால் தமிழக முதல்வர், மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டவுடன் தான் முதல்வர் நேரில் சென்று பெயரளவிற்கு பார்வையிட்டுள்ளார். மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்ட போதிலும், விவசாயிகளுக்கு வழங்கவில்லை, மக்களால் தேர்ந்து எடுக்ப்பட்ட ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் ஆளுநர் ஆய்வு செய்வது ஜனநாயகத்தினை சீர்குலைக்கும் முயற்சி.

மழையினால் தமிழகம் முழுவதும் சாலைகள் சேதமடைந்துள்ளது, அதனை சீரமைக்க வேண்டும்,மதுரை –கன்னியாகுமாரி இடையிலான இரட்டை ரெயி;ல்வே பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தென்னையில் இருந்து தயாரிக்கப்படும் நீராவிற்கு வழங்கப்படுவதை போன்று பனையில் இருந்து இறக்கப்படும் கள்ளுக்கும் அரசு அனுமதிக்க வேண்டும், திருச்செந்தூர் கோவிலில் சுற்றுசுவர் இடிந்த சம்பவம் இந்து அறநிலையத்துறையின் அஜாக்கிரதை காட்டுவதாக தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored AdsUniversal Tiles Bazar

New Shape Tailors


Johnson's Engineers


selvam aqua
Thoothukudi Business Directory