» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்ணிடம் அத்துமீறி நடந்த வாலிபருக்கு வலை

வெள்ளி 15, டிசம்பர் 2017 4:37:55 PM (IST)

கோவில்பட்டி அருகே பெண்ணிடம் அத்துமீறி நடந்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கூசாலிபட்டி மேட்டுதெருவைச் சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி சித்ரா(24). சம்பவத்தன்று கூசாலிபட்டி சாந்திநகரைச் சேர்ந்த வரதராஜ் மகன் அமுல்ராஜ்(35)என்பவர், சித்ராவை தவறான உறவுக்கு அழைத்தாக கூறப்படுகிறது. இதையடுத்து சித்ரா, அமுல்ராஜை கண்டித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த அமுல்ராஜ் அருகில் கிடந்த கம்பால் சித்ராவை தாக்கிவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சித்ரா அளித்த புகாரின் பெயரில் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய அமுல்ராஜை தேடிவருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Universal Tiles Bazar

New Shape Tailors

Johnson's Engineersselvam aqua

Thoothukudi Business Directory