» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கடைகள் இடிப்பு எதிரொலி வியாபாரிகள் திடீர் மறியல் : திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் பரபரப்பு!!

சனி 23, டிசம்பர் 2017 11:53:58 AM (IST)திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் கலையரங்கம் பகுதியில் உள்ள சுமார் 50 கடைகளம் இடித்து அகற்றப்பட்டன. இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட அ.தி.மு.க., நகர செயலாளர் மகேந்திரன் உட்பட நூற்றுக்கணக்கான வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.

சம்பவ இடத்தை அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதற்கிடையே வியாபாரிகள் இருவர் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கிரி பிரகார மண்டபம் கடந்த 14ம் தேதி இடித்து விழுந்தது. இந்த சம்பவத்தில் பேச்சியம்மாள் என்பவர் உயிரிழந்தார். இருவர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து கோயில் கிரி பிரகார மண்டபத்தை இடிக்கும் பணி நேற்று துவங்கியது. இதற்கிடையே கிரி பிரகார மண்டபத்தையட்டியுள்ள கடைகளை காலி செய்ய கோயில் நிர்வாகம் உத்தரவிட்டது.  இதற்கு கோயில் வளாக வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்நிலையில் இப்பிரச்சனை சம்பந்தாக ஆர்.டி.ஓ., கணேஷ்குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கோயில் இணை ஆணையர் பாரதி, டி.எஸ்.பி.பாலச்சந்திரன், தூத்துக்குடி மாவட்ட தி.மு.க., செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டனர். இதில் கோயில் பிரகார மண்டபத்தையட்டியுள்ள கடைகளை வியாபாரிகள் அப்புறப்படுத்தி கொள்ள ஒத்துக்கொண்டனர். மற்ற கடைகளை காலி செயவது தொடர்பாக துறை அமைச்சர் மற்றும் ஆணையரிடம் பேசி முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றுஇரவு திருச்செந்தூரில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். 

இந்த சூழ்நிலையில் கோயில் கலையரங்கம் பகுதியில் உள்ள நிரந்த கடைகள் மற்றும் பிளாட்பார கடைகள் என 50 கடைகளை இரவு இரவு பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. இதனால் கோயில் கலையரங்கம் பகுதி போர்களமாக காட்சியளித்தது. வியாபாரிகளின் பொருட்கள் சிதறி கிடந்தது. சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். வியாபாரிகள் கடைகள் இடிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் தூண்டுகை விநாயகர் நடைபாதையில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் இன்றுகாலை 7.30 மணியளவில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி. பாலச்சந்திரன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுப்பட்டவர்களை கைது செய்தனர். அ.தி.மு.க.,நகர செயலாளர் மகேந்திரன் உட்பட நூற்றுக்கணக்கான வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதற்கிடையே வியாபாரிகள் கடைகள் இடிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு வந்த சிதறி கிடந்த கடைகளை பார்வையிட்டார். அங்கு பாதுகாப்ப பணியில் இருந்த டி.எஸ்.பி. பாலச்சந்திரன் தலைமையிலான போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.டி.ஒ., கணேஷ்குமாரிடம் கிரி பிரகாரத்தை மண்டபத்தை கடைகளை அகற்றுவதாக கூறிவிட்டு வெளியே உள்ள கடைகளை எப்படி அகற்றலாம் என கேட்டார். இதனால் அங்கு பதட்டமான

சூழ்நிலை நிலவியது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட வியாபாரிகள் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த சுதாகர் மற்றும் கார்த்திக் இருவரும் அப்பகுதியில் உள்ள டவரில் ஏறி போராட்டம் நடத்தினர். சுமார் 100 அடி உயர டவரில் வியாபாரிகள் போராட்டம் நடத்தியதால் தொடர்ந்து பதட்டம் அதிகரித்தது. சம்பவ இடத்திற்கு போலீசார், தீயணைப்பு நிலைய மீட்பு படையினர் விரைந்து வந்தனர். மேலும் டவரில் ஏறிய போராட்டம் நடத்தியவர்களிடம் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் வந்து பேச்சவார்த்தை நடத்தினார். இதற்கிடையே பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு ஆதரவாக கோயில்வளாகம், நாழிகிணறு பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. வியாபாரிகளின் அடுத்தடுத்த போராட்டங்களால் திருச்செந்தூரில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.


மக்கள் கருத்து

தமிழன்Dec 23, 2017 - 01:33:43 PM | Posted IP 157.5*****

கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பே முக்கியம், பக்தர்கள் பாதுகாப்புக்காக கடையை வேறு இடத்தில மாற்றுவது தவறில்லையே.....?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads
selvam aqua

Johnson's Engineers

Universal Tiles Bazar

New Shape Tailors

Thoothukudi Business Directory