» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பஸ் ஸ்டிரைக் : பயணிகள் பரிதவிப்பு - 400க்கு மேற்பட்ட பஸ்கள் ஓடவில்லை

வெள்ளி 5, ஜனவரி 2018 8:47:53 AM (IST)



தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தூத்துக்குடியில் பஸ் ஸ்டிரைக் தொடங்கியதால் பயணிகள் பரிதவித்தனர். 

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போக்குவரத்துதுறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஈடுபட்டு வந்த நிலையில், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் அரசு பஸ்கள் ஓடவில்லை. வழக்கம் போல் தனியார் பேருந்துகள் ஒடியது. அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளிலிருந்து ஒரு சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டது. கிராமப்புறங்களுக்குள் செல்லும் அனைத்து நகர பேருந்துகளும் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பரிதவித்தனர். 

அண்ணா தொழிற்சங்கம் உட்பட அனைத்து தொழிற்சங்க தொழிலாளா்களும் பணிக்கு வரவில்லை. தற்காலிக ஓட்டுநா்கள் மற்றும் நடத்துனர்களை கொண்டு பேருந்தை இயக்க அரசு போக்குவரத்துக்கழக அலுவலா் முயற்சி மேற்கொண்டுள்ளனா். செமஸ்டர் தேர்வு எழுத வந்த மாணவர்கள் பஸ் ஓடாததால் அவதிக்குள்ளாகினர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 டிப்போக்களில் இருந்து செல்லும் சுமார் 400க்கு மேற்பட்ட பஸ்கள் டிப்போவில் நிறுத்தப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களை தடுக்க காவல்துறையின் சார்பில் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads



Universal Tiles Bazar

selvam aqua

Johnson's Engineers


New Shape Tailors









Thoothukudi Business Directory