» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தனியார் மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் : துாத்துக்குடி சார்ஆட்சியர் உத்தரவு

வியாழன் 11, ஜனவரி 2018 6:07:03 PM (IST)

துாத்துக்குடி போல்பேட்டையில் தனியார் மருத்துவமனைக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சார்ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கொசுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன. டெங்கு ஒழிப்பு பணிகுறித்து ஆய்வு மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், மற்றும் மாநகராட்சி ஆணையர் டாக்டர். அல்பி ஜாண்வர்க்கீஸ் தலைமையில் சார் ஆட்சியர் பிரசாந்த் உதவி ஆட்சியர் (பயிற்சி) சரவணன்,துணை ஆட்சியர் (பயிற்சி) லாவண்யா மற்றும் நகர்நல அலுவலர்கள், முதன்மை பூச்சியியல் வல்லுநர்கள் கொண்ட குழு நகர் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இன்று (ஜன 11) ஆய்வு மேற்கொண்ட போது போல்பேட்டை பகுதியில் உள்ள கே.ஜி. தனியார் மருத்துவமனையில் ஏடீஸ் கொசுப்புழுக்கள் இருந்தது கண்டறியப்பட்டது. 

மேற்படி மருத்துவமனைக்கு உடனடியாக கொசுப்புழுக்களை அப்பறப்படுத்தி சுத்தம் செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டதுடன் ரூ.50 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டு, சார் ஆட்சியர்பிரசாந்த்,பரிந்துரையின் பேரில், மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர். எனவே பொதுமக்கள் தங்களது குடியிருப்புகள், வளாகங்கள், அலுவலகங்கள் போன்றவற்றில் கொசுப்பு ழுக்கள் உற்பத்திக்கு ஏதுவான சூழல் இல்லை என்பதை உறுதி செய்து, மேல்நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


மக்கள் கருத்து

வடிவேல்Jan 13, 2018 - 12:34:25 PM | Posted IP 106.2*****

உழைக்கிற காசை எல்லாம் உங்களிடமே கொடுத்துட்டு போறோம். ஹெல்மட் அபராதம், டெங்கு கொசு அபராதம் இன்னும் என்ன என்ன செய்யப்போறீங்கன்னு தெரியவில்லை.

PalaniJan 11, 2018 - 08:10:33 PM | Posted IP 122.1*****

கரெக்ட் சார் .....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads



New Shape Tailors




Johnson's Engineers

Universal Tiles Bazar

selvam aqua







Thoothukudi Business Directory