» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பொன்மொழி போட்டி: ஜன.14-ல் எஸ்பி மகேந்திரன் பரிசு வழங்குகிறார்!!

வெள்ளி 12, ஜனவரி 2018 11:52:21 AM (IST)

தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பொன்மொழி போட்டிக்கான பரிசளிப்பு விழா வருகிற 14ம் தேதி நடைபெற உள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் கடந்த 09.12.2017 அன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து 20 வார்த்தைகளுக்கு மிகாமல் சிறந்த பொன்மொழியை உருவாக்குபர்களுக்கு பரிசு அறிவித்திருந்தார். 

இந்த ”சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பொன்மொழி போட்டி பரிசு வழங்கும் விழா” தைத்திருநாளை முன்னிட்டு வருகின்ற 14.01.2018 அன்று மாலை 4.30 மணிக்கு முத்து நகர் கடற்கரையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் 20 வார்த்தைகளுக்கு மிகாமல் உருவாக்கப்பட்ட சிறந்த பொன்மொழியை தேர்ந்தெடுத்து தகுந்த பரிசினை 10 காவல்துறையினருக்கும், 10 பொதுமக்களுக்கும் தனித்தனியே தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் வழங்கப்படவுள்ளது.

இவ்விழாவில் பொதுமக்கள் மற்றும் இந்த போட்டியில் கலந்து கொண்ட நபர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்று, இவ்விழாவை சிறப்பித்து சாலை பாதுகாப்பு பற்றிய சிறந்த பொன்மொழிகளையும் உருவாக்கியவர்களையும் கௌரவிக்க தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் அழைப்பு விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Adsselvam aqua


Johnson's Engineers
New Shape Tailors
Universal Tiles BazarThoothukudi Business Directory