» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா.

வெள்ளி 12, ஜனவரி 2018 12:26:19 PM (IST)தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் தமிழர் திருநாளையொட்டி கபாடி, ரங்கோலி போட்டிகள் நடைபெற்றது. ஒவ்வொரு வகுப்பு வாரியாக மாணவ, மாணவியர்கள் பாரம்பரிய உடையான வேஷ்டி, சேலை அணிந்து பொங்கலிட்டு இயற்கையை வழிபட்டனர்.

ஓவ்வொரு வகுப்பு வாரியாக மொத்தம் 54 பானைகளில் பொங்கலிட்டு மாணவ, மாணவியர்கள் பொங்கலோ பொங்கல் வாழ்த்துடன் கல்லூரி வளாகம் சமத்துவத்தை முன்னிறுத்தி தமிழனின் பாரம்பரியத்தை பறைசாற்றியது. கல்லூரி சார்பில் கல்லூரி அலுவலகத்தின் முன்புள்ள காமராஜருக்கு மரியாதை செலுத்தும்வண்ணமாக பொங்கலிட்டனர். இப்பொங்கலினை கல்லூரியின் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் கரும்பு, பனை ஓலை தோரணங்களுடன் காய்கறி வகைகள் பல படைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். பொங்கலினை அனைவருக்கும் வாழை இலையில் வைத்து பறிமாறினர். பொங்கல் இடும் வைபத்தினை சிறப்பாக செய்திருந்த அனைவருக்கும் கல்லூரி அலுவலர்கள் சரவணன், மகேஷ்வரி மற்றும் அர்ச்சனா சிறப்ப நினைவு பரிசுகளை வழங்கினர்.

இன்று நடைபெற்ற கபாடி இறுதிப்போட்டியினை கல்லூரி முதல்வர் து.நாகராஜன் துவக்கி வைத்தார். இறுதிப் போட்டியில் சுயநிதிப்பிரிவு வணிகவியல்துறை மாணவர்கள் மற்றும் பொருளியல் துறை மாணவர்கள் பங்கேற்றனர். கபாடி போட்டியில் சுயநிதி பாடப்பிரிவு வணிகவியல்துறை மாணவர்கள் முதல் பரிசினை வென்று துறைக்கான சுழற்கோப்பை, 5000 ரொக்கப்பரிசினையும் வென்றனர். 2ம் இடம் பெற்ற பொருளியல்துறை மாணவர்களுக்கு 4000 ரொக்கப்பரிசும், வரலாற்றுத்துறை மாணவர்கள் மற்றும் இயற்பியல்துறை மாணவர்கள் 3 மற்றும் 4ம் இடங்களுக்கான பரிசுகளை தலா 2500 ரொக்கப்பரிசு பெற்றனர்.விழாவிற்கு வருகை புரிந்தவர்களை தாவரவியல்துறை தலைவர் ப.செந்தூர்பாண்டி வரவேற்றார். கல்லூரி முதல்வர் நாகராஜன் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கும் சுழற்கோப்பை மற்றம் ரொக்கப்பரிசுகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் வணிகவியல்துறை தலைவர் காசிராஜன், பொருளாதாரத்துறை தலைவர் ஜெயராமகிருஷ்ணராஜ், சுயநிதிப்பிரிவு இயக்குநர் ஏ.எம்.டோனி மெல்வின் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை செந்தூர்பாண்டி, பாலசிங், முரளி, ராஜேஸ்வரி, வடிவேல்முருகன், வேல்குமார், சுப்பிரமணியன் மற்றும் நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர் தேவராஜ் அலுவலர்கள் சரவணன், ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

New Shape Tailors


Universal Tiles Bazarselvam aqua

Johnson's Engineers

Thoothukudi Business Directory