» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் கபடி போட்டி : நாலுமாவடியில் ஜன.16-ல் துவக்கம்

வெள்ளி 12, ஜனவரி 2018 12:50:07 PM (IST)

பொங்கல் திருநாளை முன்னிட்டு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் ரெடீமர்ஸ் சுழற்கோப்பைக்கான நான்காம் ஆண்டு மின்னொளி கபடி போட்டி ஜன.16, 17 ஆகிய இரு தினங்கள் நடைபெற உள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் விளையாட்டுத்துறை சார்பில் நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ரெடீமர்ஸ் சுழற்கோப்பைக் கான நான்காம் ஆண்டு ஆண், பெண் இரு பாலருக்குமான மின்னொளி கபடி போட்டி ஜனவரி 16 மற்றும் 17 ஆகிய இரு தினங்கள் நடைபெறுகிறது. போட்டிகள் மாலை 3மணிக்கு துவங்குகிறது. முதல்நாள் போட்டியை ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. சகாயஜோஸ் துவக்கி வைக்கிறார்.

இப்போட்டிகளில் தமிழக புரோ கபடி முன்னணி வீரர்கள் ஆடுகின்றனர். முதலிடத்தை பெறும் ஆடவர் அணிக்கு ரூ.50 ஆயிரமும், இரண்டாவது இடத்தைப் பெறும் அணிக்கு ரூ.30 ஆயிரமும், மூன்றாவது இடத்தைப் பெறும் அணிக்கு ரூ.20 ஆயிரமும், நான்காவது இடத்தைப் பெறும் அணிக்கு ரூ.20 ஆயிரமும் ரெடீமர்ஸ் கோப்பையும், முதலிடத்தைப் பெறும் மகளிர் அணிக்கு ரூ.40 ஆயிரமும், இரண்டாவது இடத்தைப் பெறும் அணிக்கு ரூ.25 ஆயிரமும், மூன்றாவது இடத்தைப் பெறும் அணிக்கு ரூ.10 ஆயிரமும், நான்காவது இடத்தைப்பெறும் அணிக்கு ரூ.10 ஆயிரமும் ரெடீமர்ஸ் கோப்பையும் வழங்கப்படுகிறது. 

கபடி போட்டிகள் உலகதரத்தில் மேட் முறையில் நடத்தப்படுகிறது. போட்டியைக காணவரும் பார்வையாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப் படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் தலைமையில் இயேசு விடுவிக்கிறார் ஊழியப்பொதுமேலாளர் ஜெ.செல்வக்குமார், போட்டிக்குழு ஒருங்கிணைப் பாளர் அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி பி.கணேசன், சுவி. எட்வின் சாம்ராஜ் மற்றும் இயேசு விடுவிக்கிறார் ஊழிய விளையாட்டுத் துறையினர் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads




Universal Tiles Bazar

Johnson's Engineers

selvam aqua




New Shape Tailors






Thoothukudi Business Directory