» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கவிஞர் வைரமுத்துவை கண்டித்து இந்து அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்

வெள்ளி 12, ஜனவரி 2018 4:28:22 PM (IST)

கோவில்பட்டியில் கவிஞர் வைரமுத்துவை கண்டித்து இந்து அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசினார். இந்நிகழ்ச்சியில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கூறிய கருத்துக்களுக்கு பாரதி ஜனதா கட்சி தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து சில தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் வைரமுத்துவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் ஸ்ரீஸ்ரீஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயர் தலைமை வகித்தார். 

ஆர்ப்பாட்டத்தில் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரளானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக சென்று கோட்டாட்சியரிடம் மனு அளிக்க முயன்றபோது, போலீசார் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசாரை கண்டித்து இந்து அமைப்பினர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஊர்வலமாக செல்ல போலீசார் அனுமதியளித்தை தொடர்ந்து சாலைமறியல் கைவிடப்பட்டது. பின்னர், இந்து அமைப்பினர் ஊர்வலமாக சென்று வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads



selvam aqua

Johnson's Engineers







New Shape Tailors

Universal Tiles Bazar




Thoothukudi Business Directory