» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் நிறுவனத்தில் பொங்கல் கொண்டாட்டம்

வெள்ளி 12, ஜனவரி 2018 6:29:36 PM (IST)

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. 

உலக அளவில் காப்பர் உற்பத்தியில் முன்னனியாக தூத்துக்குடியில் செயல்பட்டுவரும் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பெண் ஊழியர்களில் சுமார் நூறு பேர் ஒன்று கூடி தமிழர் திருநாளான தைத் பொங்கல்  பண்டிகையை கொண்டாடினார்கள்.

நிர்வாக அலுவலகத்தின் வாசலில் கலர் கோலமிட்டு முக்கல்லை அடுக்கி வைத்து புத்தரிசியில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். ஜாதி,மத பேதமின்றி பெண் ஊழியர்கள் கலந்து பங்கெடுத்து கொண்டு பொங்கலோ பொங்கல் என உற்சாக குரல் எழுப்பினார்கள். இந்த பொங்கல் விழாவில் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பி.ராமநாத் கலந்து கொண்டு ஊழியர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


selvam aqua



Universal Tiles Bazar

New Shape Tailors

Johnson's Engineers









Thoothukudi Business Directory