» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத் சாலமோன் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா!

சனி 13, ஜனவரி 2018 10:19:40 AM (IST)



நாசரேத் சாலமோன் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியில் பொங்கல்விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்தப்பொங்கல் விழா நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் ஜமீன் சாலமோன் தலைமை தாங்கி, பொங்கல் பானையின் அடுப்பை பற்ற வைத்து துவக்கி வைத்தார். பள்ளி தலைவர் சத்தியவதி மனோகரன் முன்னிலை வகித்தார்.

பள்ளி முதல்வர்; அனி ஜெரால்டு அவர்கள்  மாணவ மாணவியருக்கு தமிழர் திருநாளைப் பற்றி எடுத்துரைத்தார். பள்ளி உதவி முதல்வர் மகிலா சரவணன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தொழில்அதிபர் ஜெபா செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பள்ளி நிர்வாகி  பியூலா சாலமோன் அவர்கள் மாணவ, மாணவியருக்கு பொங்கல் திருநாள் சிறப்பினை, முன்னோர்கள் வாழ்ந்த விதத்தினை எடுத்துரைத்தார். மாணவ மாணவியர்களுக்கு பொங்கல் திருநாள் பேச்சுப் போட்டி, நடனம்,  மாறுவேடப் போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்கள் தாங்களே அனைத்துப் பொருட்களும் கொண்டு வந்து அவர்களே பொங்கல் பானை  வைத்து, பொங்கலோ பொங்கல் எனப் பொங்கலிட்டு ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும், அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புப் பொங்கல் வழங்கினர். இந்த பொங்கல் நிகழ்ச்சிக்கு மாணவ மாணவியர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையில் வந்திருந்தனர். இந்த விழா ஏற்பாட்டினை அனைத்து ஆசிரியப் பெருமக்களும் சிறப்பாகச் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads








Johnson's Engineers

Universal Tiles Bazar

New Shape Tailors


selvam aqua




Thoothukudi Business Directory