» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிசிடிவி கேமரா மூலம் குற்றச்செயல்கள் கண்காணிப்பு : கோவில்பட்டி நகரில் புதிய திட்டம் தொடக்கம்

சனி 13, ஜனவரி 2018 4:51:03 PM (IST)



கோவில்பட்டி நகரில் குற்றச்செயல்கள் ஈடுபடுவர்கள் மற்றும் சாலை விதிகளை மீறுபவர்களை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

கோவில்பட்டி நகரில் குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள் மற்றும் சாலை விதிகளை மீறுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு கோவில்பட்டியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் நகரில் பசுவந்தனை சாலையில் 3, அரசு மருத்துவமனை பகுதியில் 4, புதுரோட்டில் 3, அண்ணாபஸ் நிலையம் 4 என மொத்தம் 37 கண்காணிப்பு கேமரா சமீபத்தில் பொருத்தப்பட்டு, அதில் 32 கண்காணிப்பு கேமரா செயல்பட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மொத்தகண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை போக்குவரத்து துறை காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த அறையை டி.எஸ்.பி.ஜெபராஜ் பார்வையிட்டு கண்காணிப்பு கேமரா செயல்பட்டினை பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மகேந்திரன் ஆலோசனை மற்றும் உத்தரவின் பெயரில் கோவில்பட்டி நகரை விபத்தில்லா நகராக உருவாக்கும் நோக்கில், நகரில் சாலை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையிலும், குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களை கண்காணிக்கும் வகையிலும் நகர் முழுவதும் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிப்பு செய்து நடவடிக்கை எடுக்கும் திட்டம் தொடக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக ஒரு பைக்கில் 3 பேராக செல்பவர்கள், ஹெல்மேட் அணியமால் செல்பவர்கள் மற்றும் சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் கண்காணிப்பு கேமரா மூலமாக கண்காணிக்கப்பட்டு, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், பொதுமக்களும் விபத்தில்லாத நகராக உருவாக்க ஒத்துழைக்க வேண்டும் என்றார். பேட்டியின் போது ஆய்வாளர்கள் பவுல்ராஜ், விநாயகம், போக்குவரத்து உதவி ஆய்வாளர் சுடலைமுத்து மற்றும் போக்குவரத்து காவலர்கள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Universal Tiles Bazar




selvam aqua




New Shape Tailors



Johnson's Engineers



Thoothukudi Business Directory