» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை: போலீஸ் விசாரணை

ஞாயிறு 14, ஜனவரி 2018 10:04:27 AM (IST)

கயத்தாறு அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறையடுத்த அய்யனார்ஊத்து கீழத் தெருவைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகள் முத்துலட்சுமி (20). கயத்தாறில் உள்ள தனியார் ஐ.டி.ஐ.-யில் தையல் பயிற்சி படித்து வந்த இவருக்கு, அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவது வழக்கமாம். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முத்துலட்சுமி விஷம் குடித்துள்ளார்.

இதையடுத்து அவரை, கயத்தாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Universal Tiles Bazar



Johnson's Engineers




New Shape Tailors



selvam aqua




Thoothukudi Business Directory