» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பேருந்தில் ஆசிரியையிடம் ரூ. 38 ஆயிரம் பணம் திருட்டு

ஞாயிறு 14, ஜனவரி 2018 10:06:21 AM (IST)

திருச்செந்தூரில் பேருந்தில் பயணம் செய்த ஆசிரியையிடம் ரூ. 38 ஆயிரம் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தெற்கு அமிர்தவிளை மேலத் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி ரோஸ்லின் அன்னலீலா (48). இவர் சாத்தான்குளத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். 

இவர் சம்பவத்தன்று திருச்செந்தூரில் எல்.ஐ.சி.யில் பணம் செலுத்துவதற்காக சாத்தான்குளத்திலிருந்து அரசுப் பேருந்தில் திருச்செந்தூர் வந்துள்ளார். பின்னர் எல்.ஐ.சி. அலுவலகம் சென்று தன் கைப்பையில் வைத்திருந்த பணத்தை பார்த்தபோது ரூ. 38,350-ஐ காணவில்லையாம். இதுகுறித்த புகாரின்பேரில் திருச்செந்தூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

New Shape Tailors

selvam aqua




Johnson's Engineers





Universal Tiles Bazar





Thoothukudi Business Directory