» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் மீது கார் மோதி விபத்து: 3பேர் பரிதாப சாவு

ஞாயிறு 14, ஜனவரி 2018 5:10:25 PM (IST)



கோவில்பட்டி அருகே மோட்டார் பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3பேர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள குமரெட்டியபுரத்தினை சேர்ந்த பரமசிவம் மகன் கண்ணன், அதே ஊரைச் சேர்ந்த ராசுபாண்டியன் என்பவரது மகன் மாரிமுத்து, மற்றும் வானரமுட்டியை சேர்ந்த ராமசாமி ஆகியோர் ஒரே பைக்கில் கழுகுமலைக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போது அரியலூர் மாவட்டம் ஜெயக்கொண்டத்தில் இருந்து கழுகுமலை நோக்கி வந்த கார் தீடீரென எதிரே வந்த பைக் மீது மோதியதில் பைக்கில் வந்த கண்ணன், மாரிமுத்து, ராமசாமி, ஆகியோர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும் இவ்விபத்தில் பைக் தீப்பற்றி எரிந்தது. விபத்து குறித்து தகவல் கிடைத்தும் கழுகுமலை போலீசார் விரைந்து வந்து உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரே பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் டி.எஸ்.பி.ஜெபராஜ் சம்பவ இடத்தினை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் காரின் முன்பக்க டயர் திடீரென கழன்று, தனியாக சென்றதால் தான் விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads




Universal Tiles Bazar

selvam aqua

Johnson's Engineers

New Shape Tailors









Thoothukudi Business Directory