» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆன்மீக இளைஞர் அணி சார்பில் ஆதரவற்றோர் இல்லங்களில் பொங்கல் சமுதாயப்பணி

ஞாயிறு 14, ஜனவரி 2018 6:51:35 PM (IST)மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இளைஞர் அணி சார்பில் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு பொங்கல் சமுதாயப்பணி வழங்கப்பட்டது.

தைப்பொங்கலை முன்னிட்டு திருவிக நகர் மற்றும் மேலூர் சக்திபீடத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், விவசாயம் செழிக்கவும், விவசாயிகள் நலமுடன் வாழவும் மகளிர் 1008 குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். சக்திபீடத் தலைவர் கிட்டப்பா அன்னை ஆதிபராசக்திக்கு சிறப்பு தீபாராதனை செய்து துவக்கி வைத்தார். 

இதனையடுத்து, மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள்திரு அடிகளார் உத்தரவின்படி 31ம் ஆண்டு தைப்பொங்கல் சமுதாயப்பணியாக‌,  தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கால்டுவெல் காலனி நேசக்கரங்கள் இல்லம், கூட்டாம்புளி அன்பு உள்ளங்கள், ராஜீவ்நகர் அன்னை கருணை இல்லம், கதிர்வேல்நகர் ஆன்மாவின் அன்புக்காப்பகம், பெத்தானி பார்வையற்ற பெண்கள் இல்லம், ஆரோக்கியபுரம் தொழுநோய் இல்லம், கீழஅழகாபுரி, பவுல் பார்வையற்ற பெண்கள் இல்லம், நரிக்குறவர் குடியிருப்பு மற்றும் தெருவோர ஏழைமக்கள் உள்ளிட்ட 1200 பேருக்கு பொங்கல், கரும்புகள், ஆடைதானம் வழங்கப்பட்டன. 

இந்நிகழ்ச்சியில், ஆன்மீக இளைஞர் அணி பொறுப்பாளர்கள் சக்திமுருகன், ஆதிநாராயணன், ஹார்பர் மன்ற பொறுப்பாளர் தனபால், மணி, வேலு, சக்திபீட பொறுப்பாளர்கள் திருஞானம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

selvam aqua


New Shape TailorsUniversal Tiles BazarJohnson's EngineersThoothukudi Business Directory