» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சில்மிஷ தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரி காவல் நிலையத்தில் பொதுமக்கள் முற்றுகை

வியாழன் 18, ஜனவரி 2018 5:11:50 PM (IST)சிறப்பு வகுப்பில் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியரை கைது செய்யகோரி பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் உடன்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி கிறிஸ்தியா நகரத்தில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். 10ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அரசு தேர்வு என்பதால் அவர்களுக்கு பள்ளி நேரம் தவிர சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தலைமை ஆசிரியர் ஜேக்கப் மனோகர் இதில் கவனம் செலுத்தி வந்தார். குறிப்பாக பிளஸ்-1 மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்தால் அந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் இரவு நேரத்தில் எடுக்கப்பட்டு வந்தது. 

அப்போது மாணவர்களிடம் தலைமை ஆசிரியர் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தாராம். இதற்கு உடன்படாத மாணவர்கள் மிரட்டப்பட்டதால் அவர்கள் வெளியில் சொல்ல பயந்ததோடு பள்ளிக்கும் ஒழுங்காக செல்லாமல் கட் அடித்துள்ளனர். நீண்ட நாட்களாக நடைபெற்ற சில்மிஷ விளையாட்டு தற்போதுதான் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. நேற்று மதியம் அவர்கள் பள்ளிக்கு திரண்டு வந்தனர். அவர்களுடன் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், இந்து அமைப்பினர் என ஊரே பள்ளி முன் கூடி முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்படவே குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் அஜிகுமார் மற்றும் போலீசார் அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தினர். 

சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் இடமாற்றம் செய்யப்படுவார் என பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தனர். மதியம் ஆரம்பித்த இந்த போராட்டம் இரவு வரை நீடித்தது. பள்ளி முன் திரண்ட பொது மக்கள் அதன் பிறகு குலசேரகன்பட்டினம் சென்று அங்கு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அவர்களின் எதிர்காலம் குறித்து கலக்கமடைந்துள்ளனர். 


மக்கள் கருத்து

PalaniJan 20, 2018 - 11:42:36 AM | Posted IP 122.1*****

ஏலேய் மக்கள் அரசு சார்தந்த பள்ளியில் கட்டணம் கம்மி என்ற காரணத்தினால் பிள்ளைகளை சேர்க்கின்றனர் .ஏன்டா ஏலேய் மக்கள் வைத்திலும்,மனதிலும் காயப்படுத்திறீங்க ..உன் காமவிளையாட்டய் உன் வீட்டில் நீ காட்டு .....99999999999999999999999

muruganJan 20, 2018 - 11:32:48 AM | Posted IP 122.1*****

ஏலெய் மக்கள் .அரசு பள்ளியின் கட்டணம் குறை எண்ற காரணத்தினால் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்கின்றன .ஏலெய் மக்களெய் வாழவிடுங்கள் .உனது சேக்ஸ் வெர்ரிய் உன் விட்டல காட்டு ....999999999999

தமிழன்Jan 19, 2018 - 11:00:49 AM | Posted IP 157.5*****

ஆசிரியர் சமூகத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் செயல்படும் இதுபோன்ற தரம்கெட்ட ஆசிரியர் ஜேக்கப்பை உடனடியாக பணிநீக்கம் செய்து கைது செய்யவேண்டும் .

தமிழ்ச்செல்வன்Jan 18, 2018 - 07:58:22 PM | Posted IP 61.3.*****

ஓரின சேர்க்கை மன்னன் ஜேக்கப் மனோகரை உடனே கைது செய்ய வேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads
Johnson's Engineers


crescentopticals


New Shape Tailors
Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory