» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடிநீர் விற்பனை வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு: குளோரினேசன் செய்யாத வாகனங்களுக்கு அபராதம்

வியாழன் 18, ஜனவரி 2018 5:31:59 PM (IST)தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக தனியார் குடிநீர் விற்பனை டேங்கர் லாரிகள், தனியார் குடிநீர் விற்பனை நிலையங்கள் ஆய்வு செய்யப்பட்டன. முறையாக குளோரினேசன் செய்யாமல் குடிநீர் வினியோகம் செய்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் உத்தரவின்படி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள மஸ்தூர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுப்புழுக்கள் உள்ளதா? குடிநீர்த் தொட்டிகள் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளதா? வீடுகளில் தேவையற்ற டயர்கள், சிரட்டை, தேங்காய் மட்டைகள், குப்பைகள் உள்ளதா? என்பதை ஆய்வு செய்து வருகிறார்கள். 

கிராம ஊராட்சிப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள், பள்ளிகள், அங்கன்வாடி கட்டிடங்கள், வணிக வளாகங்கள், கடைகள், வீடுகள் ஆகியவற்றிலும் டெங்கு காய்ச்சல் உருவாக்கும் கொசுப்புழுக்கள் உள்ளனவா? என ஆய்வு செய்வதுடன் கொசுப்புழு தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டால் அந்தந்த ஊராட்சி நிர்வாகத்தால் உடனுக்குடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலர்களும் பொது சுகாதாரத்துறை அலுவலர்களும் இணைந்து மேற்பார்வை செய்து வருகின்றனர்.

கிராம ஊராட்சிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் குளோரினேசன் செய்யப்பட்டு வழங்கப்படுவதுடன் தனியார் குடிநீர் விற்பனை நிலையங்களும் ஆய்வு செய்யப்பட்டு, குளோரினேசன் இல்லாத குடிநீர் வழங்கினால் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று (ஜன.18) மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட தாய் நகர், சேசு நகர், கிழக்கு காமராஜர் நகர் பகுதிகளில் உள்ள 20 தனியார் குடிநீர் விற்பனை நிலையங்கள், தனியார் டேங்கர் லாரிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் முறையாக குளோரினேசன் செய்யப்படாத 8 விற்பனையாளர்களுக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சியால் மொத்தம் ரூ. 3,100- அபராதம் வசூலிக்கப்பட்டது. 

மேற்படி குடிநீரில் ஊராட்சி நிர்வாகம் மூலம் குளோரினேசன் செய்யப்பட்டது. முறையாக குளோரினேசன் செய்யப்படாத குடிநீர் வினியோகம் செய்தால் அபராதம் விதிக்கப்படுவதோடு, இது போன்று சுகாதார பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து நடந்து கொள்பவர்கள் மீது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 மற்றும் தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939 ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது. ஆய்வின்போது தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையர் கோ. இசக்கியப்பன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆர்.இராமசாமி ராஜா, சுகாதார ஆய்வாளர்கள் வில்சன், சித்ரா, ஊராட்சி செயலர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTDcrescentopticals


Johnson's Engineers
New Shape Tailors
Thoothukudi Business Directory