» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பணம் தர மறுத்ததால் பைக்கை சேதபடுத்திய போலீஸ்? டி.எஸ்.பி. அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை!!

வியாழன் 18, ஜனவரி 2018 5:49:30 PM (IST)கோவில்பட்டியில் லஞ்சம் தர மறுத்ததால் ரூ.2லட்சம் மதிப்புள்ள பைக்கை போலீசார் சேதபடுத்தியதாகக் கூறி, டி.எஸ்.பி. அலுவலகத்தினை பொதுமக்கள் முற்றுகையிடதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்தவர் வேல்சாமி, பழக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சதிஷ், கோவில்பட்டியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2வது ஆண்டு சிவில் பிரிவில் பயின்று வருகின்றார். இந்நிலையில் கடந்த 1 தேதி ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு வீரவாஞ்சி நகர் பகுதியில் சதிஷ் மற்றும் அவரது நண்பர்கள் கேக் வெட்டி புத்தாண்டு கொண்ட்டாடத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அப்பகுதியில் ஒரு வீட்டின் ஜன்னல் கண்ணாடியை யாரே உடைத்ததாக தெரிகிறது. இது குறித்து அந்த வீட்டின் உரிமையாளர் மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். 

இதனை தொடர்ந்து மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜபிரபு தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு வந்து விசாணை நடத்தியுள்ளனர். மேலும் சம்பவத்தன்று புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சதிஷ் மற்றும் அவரது நண்பர்கள் வீட்டிற்கு சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தியது மட்டுமின்றி அவரது வீட்டில் இருந்த ரூ.2 லட்ச மதிப்பிலான பைக்கினை பறிமுதல் செய்து கொண்டு சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து சதிஷின் தந்தை வேல்சாமி காவல் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் கேட்டபோது பைக் நீதிமன்றத்திற்கு வரும், அங்கு சென்று உரிய ஆவணங்களை காட்டி, எடுத்து கொள்ளவும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் நீதிமன்றத்திற்கு பைக் கொண்டு வராத காரணத்தினால் மீண்டும் காவல்நிலையத்தில் வேல்சாமி முறையிட்ட போது காவல்துறையினர் எவ்வித பதிலையும் தரமால் இருந்துள்ளனர். இந்நிலையில் கோவில்பட்டி அருகேயுள்ள இடைச்செவல் காட்டுபகுதியில் சதிஷன் பைக் அநாதையாக கிடந்ததாக போலீசார் தாசில்தாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் பைக் என்ஜீன் எண், பைக்கின் முக்கிய பாகங்கள் அனைத்தையும் சேதப்படுத்தி, பைக்கினை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதை கண்ட வேல்சாமி மற்றும் அவரது உறவினர்கள் கோவில்பட்டி டி.எஸ்.பி. அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும், எவ்வித தவறும் செய்யாத மகனின் பைக்கினை எடுத்து வந்து, பணம் பறிக்கும் நோக்கில் பைக்கை நீதிமன்றத்திலும், ஒப்படைக்காமல், பைக்கினை சேதப்படுத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர். இதையெடுத்து முற்றிலுமாக சேதமடைந்த பைக் சதிஷ் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பணம் தர மறுத்த காரணத்தினால் கல்லூரி மாணவனின் பைக் முற்றிலுமாக போலீசாரால் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Johnson's Engineers


New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTDcrescentopticalsThoothukudi Business Directory