» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி நகர்ப்புறப் பகுதியில் 20ம் தேதி மின்தடை

வியாழன் 18, ஜனவரி 2018 5:57:19 PM (IST)

தூத்துக்குடியில் உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வருகிற 20ம் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி நகர மின் விநியோக செயற்பொறியாளர் வே.தென்னரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி எட்டையபுரம் ரோட்டிலுள்ள உபமின் நிலையத்தில் வருகிற 20ம் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக கீழ்காணும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் மின்தடை செய்யப்படும்.

இதன்படி, போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1ம்கேட், 2ம் கேட், மட்டக்கடை, தெப்பகுளம், சிவன்கோயில் தெரு, டபிள்யூ.ஜி.சி ரோடு, ஜார்ஜ் ரோடு, விஇ ரோடு, ஸ்டேட் பாங்க் காலனி, முத்துகிருஷ்ணாபுரம், முத்தம்மாள் காலனி, கேடிசி நகர்,  சிவந்தாகுளம் மெயின்ரோடு, தாமோதர நகர், குறிஞ்சி நகர், ஹவுசிங் போர்டு காலனி, சிதம்பர நகர், பிரையண்ட் நகர், மில்லர்புரம், ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

குலாம், ஹவுசிங்போர்டு 3 வது வார்டுJan 18, 2018 - 06:38:44 PM | Posted IP 210.1*****

முதலில் எங்கள் பகுதி( ஹவுசிங்போர்டு) எந்த ss என்று சரிபார்த்து தகவல் அளியுங்கள், கடந்த 3 முறை மின் தடை அறிவித்தும் மின் தடை ஏற்படவில்லை, அதற்கு பதிலாக சிப்காட் SS மின் தடை அறிவித்தால் அன்று முன்னறிவிப்பு இல்லாமல் மின் தடை ஏற்படும், அதிகாரிகளின் அலட்சியமா?? அல்லது உயர் அதிகாரிகளுக்கு தெரியாதா????

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored AdsNew Shape Tailors

crescentopticalsJohnson's Engineers
Friends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory