» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தீயணைப்புத்துறை சார்பில் அவசரகால ஒத்திகை

ஞாயிறு 21, ஜனவரி 2018 9:03:49 AM (IST)

தூத்துக்குடியில் தீயணைப்புத்துறை சார்பில்  அவசரகால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது..

தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், அவசர காலங்களில் மாணவர்கள் வகுப்பறையில் இருந்து வெளியேறுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பான அவசரகால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஒத்திகை நிகழ்ச்சியின்போது, அவசர காலத்தில் செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சை, காயமடைந்த மாணவர்களை மீட்பது, தீ விபத்து ஏற்படும் போது தன்னையும், மற்றவர்களை பாதுகாப்பது போன்றவை குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தீயணைப்பு, மீட்பு பணி துறை அலுவலர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored AdsNew Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals


Johnson's Engineers
Thoothukudi Business Directory