» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி இன்ஜினியரிங் மாணவி காதலனுடன் எஸ்கேப்

திங்கள் 5, பிப்ரவரி 2018 11:24:05 AM (IST)

தூத்துக்குடி இன்ஜினியரிங் மாணவி காதலனுடன் மாயமானது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் தெற்குத் தெரு பிரம்மதேசத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம். இவரது மகள் சுப்புலட்சுமி என்ற சுபா(20). இவர் தூத்துக்குடியில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் இறுதியாண்டு சிவில் படித்து வருகிறார். கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வரும் இவர் வார இறுதி நாட்களில் சொந்த ஊரான அம்பாசமுத்திரம் செல்வராம். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சொந்த ஊருக்கு செல்வதாக விடுதியில் இருந்து சென்ற மாணவி ஊருக்கு செல்லவில்லையாம். இதனால் இவரது தந்தை மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. 

இந்நிலையில், மாணவி சுபா அதே ஊரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்ற வாலிபருடன் மாயமாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சுபாவின் பெற்றாெர் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

ArunFeb 5, 2018 - 10:52:37 PM | Posted IP 103.8*****

Poruppatra pengal nam samuthayathin saabakedu

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD



Johnson's Engineers

New Shape Tailors



crescentopticals






Thoothukudi Business Directory