» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாஸ்போர்ட் விசாரணைக்கு நவீனமுறை அறிமுகம்: காவலர்களுக்கு டேப் வழங்கினார் எஸ்பி மகேந்திரன்

புதன் 7, பிப்ரவரி 2018 3:27:11 PM (IST)



தூத்துக்குடியில் எம் பாஸ்போர்ட் திட்டத்தின் கீழ், காவல் நிலையங்களுக்கு கையடக்க கணினிகளை எஸ்பி மகேந்திரன் வழங்கினார். 

பாஸ்போர்ட் விண்ணப்பித்தல் முறையில் போலீஸ் விசாரணைக்கு ஆகும் தாமதத்தை தவிர்க்கும் வகையில் எம் - பாஸ்போர்ட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி காவல் நிலையங்களில் செயல்படும் நுண்ணறிவுப் பிரிவு (ஐஎஸ்) போலீசாருக்கு டேப் எனப்படும் கையடக்க கணினிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 49 காவல் நிலையங்களைச் சேர்ந்த காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பயிற்சி பெற்ற காவலர்களுக்கு டேப்லட் கருவியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ. மகேந்திரன் வழங்கினார். 

அப்போது அவர் கூறியது: பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக நேரடியாக அந்தந்த காவல் நிலையத்துக்கு அனுப்பப்படும். அங்கு சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் வீட்டுக்கு சென்று உரிய விசாரணை நடத்தியும், டேப்லட் கருவியில் படம் பிடித்தும், உடனடியாக ஆன்லைன் மூலமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து உரிய விசாரணைக்குப் பிறகு பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த புதிய திட்டம் பிப்.9 (வெள்ளிக்கிழமை ) முதல் செயல்பட உள்ளதால் டேப்லட் பெற்ற காவலர்கள் காலதாமதம் இல்லாமல் விசாரணையை முடித்து விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads




Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals

New Shape Tailors


Johnson's Engineers







Thoothukudi Business Directory