» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிட்கோ தொழிற்பேட்டையில் தீ விபத்து : ரூ.2கோடி மதிப்பிலான தும்புகள் ஏறிந்து நாசம்

வியாழன் 8, பிப்ரவரி 2018 9:05:30 AM (IST)



தூத்துக்குடி சிட்கோ தொழிற்பேட்டையில் தும்பு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கு வைத்திருந்த ரூ.2 கோடிக்கு மதிப்பிலான தும்புகள் ஏறிந்து சேதம் அடைந்தது.  

தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளத்தில் சிட்கோ தொழிற்பேட்டை உள்ளது. இங்குள்ள தனியார் தும்பு ஆலையில் உள்ள கிட்டங்கியில் இன்று அதிகாலை திடீரென தீப்பற்றியுள்ளது. இதனால் அப்பகுதியில் புகைமண்டலமாக மாறியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயனைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து தீயனைப்புத்துறை அதிகாரி நட்டார் ஆனந்தி தலைமையில்  5 வண்டிகளில் விரைந்து வந்த தீயனைப்பு துறையினர் 4 மணி நேரத்திற்கு மேல் தீயை அனைக்க போராடி வருகின்றனர். 

ஆலையின் பக்கவாட்டு சுவர் உயரமாக இருந்ததால் சுவரை உடைத்து தீயை அனைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தும்பு ஆலையில் உள்ள தும்புகள் சுத்தம் செய்யப்பட்டு செங்கல்கள் வடிவில் வெட்டி தயார் செய்யப்பட்டு அதை பேக்கிங் செய்து இங்கிருந்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் பணியாளர்கள் யாரும் பணியில் இல்லை இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீவிபத்து குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.  


மக்கள் கருத்து

தமிழ்ச்செல்வன்Feb 8, 2018 - 12:54:01 PM | Posted IP 59.93*****

அது என்னடா? தும்பு கம்பெனியில் மட்டும் அடிக்கடி தீ பிடிக்குது? இன்சூரன்ஸ் கம்பெனியில் ஆட்டைய போடுறதுக்குத்தானே?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads





Johnson's Engineers



crescentopticals

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD





Thoothukudi Business Directory