» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி துறைமுகத்தில் உற்பத்தி திறன் வார விழா

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 10:13:44 AM (IST)



தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் உற்பத்தி திறன் வார தொடக்க விழா நடைபெற்றது.

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் உற்பத்தி திறன் வார தொடக்க விழா முதுநிலை துணை போக்குவரத்து மேலாளர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. கடலோர காவல் படை கட்டளை அதிகாரி எஸ்.பி. வெங்கடேஷ்  விழாவை தொடங்கி வைத்து பேசியது:   ஒட்டு மொத்த போக்குவரத்து தளவாடங்களை ஒருங்கிணைப்பதற்கு இணையதளங்கள் சார்ந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்றார். 

நிகழ்ச்சியில், துறைமுக சபை உறுப்பினர் ஆர். ரசல், துறைமுக துணை பாதுகாவலர் கேப்டன் பபாடோஸ் சந்த், மூத்த துணை போக்குவரத்து மேலாளர் எடிசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிப்ரவரி 18-ம் தேதி வரை  துறைமுக ஊழியர்களுக்கான கட்டுரை, சுலோகம் எழுதும் போட்டி மற்றும் பேச்சுப் போட்டியும், துறைமுக உபயோகிப்பாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் துறைமுக அதிகாரிகள் அனைவருக்கும் தனித்தனியாக உற்பத்தி மேம்படுத்துதல் பற்றிய கருத்தரங்கமும் நடைபெறுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Johnson's Engineers



crescentopticals


New Shape Tailors







Thoothukudi Business Directory