» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆபாச படம் பார்க்க மறுத்த மாணவனுக்கு கத்திக்குத்து : கார் டிரைவர் வெறிச்செயல்

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 4:59:49 PM (IST)

ஏரலில் செல்போனில் ஆபாச படம் பார்க்க மறுத்த மாணவனை கார் டிரைவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பெரிய மணரா நாடார் தெருவைச் சேர்ந்தவர் வீரக்குமார் மகன் கருப்பசாமி (37), கார் டிரைவர். இவர் அப்பகுதியைச் சேர்ந்த 10வது வகுப்பு படிக்கும் மாணவனுடன் நட்பாக பழகி வந்துள்ளார். நேற்று காலை பள்ளிக்கு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த மாணவனை வழிமறித்து கருப்பசாமி செல்போனில் ஆபாச படம் போட்டு அதனை பார்க்குமாறு வற்புறுத்தினாராம். 

அதற்கு மாணவன் மறுக்கவே அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி மாணவனை கத்தியால் குத்தியுள்ளார். மாணவனும் அவரை தாக்கியுள்ளார். காயம் அடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Johnson's Engineers


Friends Track CALL TAXI & CAB (P) LTD





New Shape Tailors


crescentopticals




Thoothukudi Business Directory