» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் முறைகேடு : தொடக்கக் கல்வி அலுவலகத்தில் போராட்டம்.

புதன் 14, பிப்ரவரி 2018 10:53:26 AM (IST)



தூத்துக்குடி மாவட்டம் தொடக்கக்கல்வித் துறை சார்பில் எவ்வித முன்னரிவிப்பு இன்றி  தற்காலிக பணி ஆணை ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள்  மாவட்டம் தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் தொடக்கக்கல்வித் துறை சார்பில் கடந்த மே மாதம் 24,25 தேதிகளில் நடைபெற்ற பொது மாறுதல், பணி நிரவல், கலந்தாய்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இதில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர்களுக்கு அவரது வீட்டருகில் உள்ள பள்ளியில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்து ஆசிரியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் இதுவரை எவ்விதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டுக்களை ஆசிரியர்கள்   கூறி வருகின்றனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக 02.11.2017 முதல் 06.11.2017 வரை தொடர் உள்ளிருப்பு போராட்டங்கள் நடத்திய ஆசிரியர்கள், இதுகுறித்த நடைபெற்ற சமதான கூட்டத்தில் எங்களது இருப்பிடம் அருகில் தற்காலிக பணி ஆணை வழங்கப்பட்டதாகவும், ஆனால் அந்த ஆணையை எவ்வித முன்னறிவிப்பு இன்றி கடந்த 2 நாட்களுக்கு முன் தற்காலிக பணி ஆணை ரத்து செய்யப்பட்டதாக தொடக்கக்கல்வி அலுவலர் அறிவித்துள்ளதைக் கண்டித்தும் தாங்கள் பணியாற்றிய பழைய பள்ளிக்கு செல்லும் சூழல் உருவாகியுள்ளதாகவும், இதனால் 160 கி.மீ தூரம் பயணம் சென்று வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், ஆகவே எங்களத கோரிக்கை நிறைவேறும் வரை தூத்துக்குடி மாவட்டம் தொடக்கக்கல்வி அலுவலகத்தில் தொடர் போராட்டம் நடைபெறும் என ஆசிரியர்கள்  தெரிவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads




crescentopticals

Johnson's Engineers




Friends Track CALL TAXI & CAB (P) LTD



New Shape Tailors



Thoothukudi Business Directory