» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இலவச தாய்சேய் வாகன ஓட்டுநர் பணியிடங்களுக்கு 16ம் தேதி நேர்முகத் தேர்வு

புதன் 14, பிப்ரவரி 2018 10:58:57 AM (IST)

தூத்துக்குடி இலவச தாய்சேய் வாகனம் மற்றும் இலவச அமரர் ஊர்தி வாகன ஓட்டுநர் பணிக்கான நேர்முகத் தேர்வு வரும் 16ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுகிறது. 

இது குறித்து இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் அமைப்பின் தலைவர் - வசீகரன், செயலாளர்- முத்துராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு உதவியுடன் இந்தியன் ரெட்கிராஸ் தமிழ்நாடு கிளையின் மூலமாக செயல்படுத்தி வரும் இலவச தாய்சேய் வாகனம் மறறும் இலவச அமரர் ஊர்தி வாகனத்தின் ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் பிப்ரவரி 16ம் தேதி வெள்ளிக் கிழமை காலை 9.30 மணியளவில் அபிராமி மருததுவமனை, 217,புதுக்கிராமம், தூததுககுடி 3 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.

இந்த பணியிடத்திற்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் அல்லது பேட்ஜ் எடுத்து 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். வயது 25 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். உயரம் 162.5 செமீ இருக்க வேண்டும் தகுதியானவர்கள் தங்களது அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளவும். தகுதியானவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் தற்காலிகமாக பணியமர்த்தப்படுவார்கள். மேலும் விபரங்கள் அறிய 770800237 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads



New Shape Tailors

Johnson's Engineers





crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD




Thoothukudi Business Directory