» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரவுடி பினுவின் கூட்டாளி ஸ்ரீவை. நீதிமன்றத்தில் சரண்!!

புதன் 14, பிப்ரவரி 2018 12:26:55 PM (IST)

பிரபல ரவுடி பினுவின் கூட்டாளியான லாரி செட் உரிமையாளர் வேல் (எ) வேல்முருகன் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். 

சென்னை மாங்காடு அருகே உள்ள மலையம்பாக்கத்தில் அப்பகுதியை சேர்ந்த வேலு என்ற வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான லாரி ஷெட்டில் சூளைமேட்டை சேர்ந்த ரவுடி பினு தனது கூட்டாளிகள் 100 பேருடன் கடந்த 6-ம் தேதி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினான். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அந்த இடத்தை சுற்றி வளைத்த போலீசார், கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் திரண்டிருந்த 75 ரவுடிகளை மடக்கி பிடித்து கைது செய்தனர். ஆனால் ரவுடி பினு, தனது கூட்டாளிகள் சிலருடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.

தலைமறைவாக இருந்த ரவுடி பினுவையும், பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்த லாரி செட்டின் உரிமையாளரான வேலு என்கிற வேல்முருகனை உள்ளிட்டோரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் ரவுடி பினு அம்பத்தூர் துணை கமி‌ஷனர் சர்வேஸ் ராஜ் முன்பு நேற்று திடீரென சரண் அடைந்தான். இதையடுத்து பினு கைது செய்யப்பட்டான். இதனை தொடர்ந்து அவன் தனிப்படை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான். அவனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பினுவையும், தப்பி ஓடிய அவனது கூட்டாளிகளையும் துப்பாக்கியால் சுட்டு பிடிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து என் கவுண்டர் பீதியும் நிலவியது. இந்த நிலையில்தான் ரவுடி பினு போலீஸ் அதிகாரி முன்பு சரண் அடைந்துள்ளான். போலீஸ் என்கவுண்டருக்கு பயந்தே பினு சரண் அடைந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ரவுடிகள் பிறந்த நாள் கொண்டாட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த லாரி ஷெட்டின் உரிமையாளரான வேலு என்ற வேல்முருகன் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார். 

தனக்கும் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என வேல்முருகன் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இதனை தொடர்ந்து வேல்முருகனை 23ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் அதுவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி முருகன் உத்தரவு பிறப்பித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads





crescentopticals

Johnson's Engineers

Friends Track CALL TAXI & CAB (P) LTD



New Shape Tailors





Thoothukudi Business Directory