» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் : துாத்துக்குடி ஆட்சியர் வேண்டுகோள்

புதன் 14, பிப்ரவரி 2018 6:42:00 PM (IST)



நமது சமுதாயத்தை, ஆரோக்கியமான சமுதாயமாக உருவாக்கிட வேண்டும் என திருச்செந்துார் அருகே நடைபெற்ற மனு நீதிநாள் முகாமில் ஆட்சியர் வெங்கடேஷ் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் தலைமையில், இரண்டாம் கட்ட மனுநீதி நாள் முகாம் திருச்செந்தூர் வட்டம், அம்மன்புரம் கிராமம், சமுதாய நலக்கூடத்தில் இன்று (14.2.2018) நடைபெற்றது. இம்முகாமில் ஆட்சியர் தெரிவித்ததாவது:மரம் வளர்ப்பதன் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து உங்களது நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். நமது மாவட்டத்தை முழு சுகாதாரமான மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப் புறத்தில் உள்ள தேவையற்ற பொருட்களில் நல்ல நீர் தேங்கி இருந்தால் அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். டெங்கு கொசு நல்ல நீரில் தான் உருவாகிறது என்பதனை, பொது மக்கள் மனதில் கொள்ள வேண்டும். மேலும், காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படும் போது, அரசு மருத்துவர்களின் ஆலோசனை படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும். தாமாக மருந்துகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். 

திறந்த வெளியில் மலம் கழித்தால், சுகாதாரக் கேடு ஏற்படும். உயிருக்கே ஆபத்து விளைவிக்கும்.  சுகாதாரம் என்பது ஒவ்வொருவரின் பொறுப்பு என்பதை உணர்ந்து, திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்க்க வேண்டும். தங்களது வீடுகளில் உள்ள தனிநபர் இல்லக் கழிப்பறையை பயன்படுத்தி நமது சமுதாயத்தை, ஆரோக்கியமான சமுதாயமாக உருவாக்கிட வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து முகாமில் வேளாண்மைத்துறை, தோட்டக்க லைத்து றை, சுகாதாரத்துறை  மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்  ஆகிய துறைகளின் மூலம் அமைக்கப்பட்ட கண்காட்சி பார்வை யிட்டார்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD




Johnson's Engineers


New Shape Tailors






Thoothukudi Business Directory