» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாளையில் விவசாயிகளுக்கான ஆசீர்வாத ஜெப மாநாடு : சகோ.மோகன் சி.லாசரஸ் பங்கேற்பு

செவ்வாய் 10, ஜனவரி 2017 10:59:16 PM (IST)



பாளையங்கோட்டையில் விவசாயிகளுக்கான ஆசீர்வாத ஜெப மாநாடு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ.மோகன் சி. லாசரஸ் தலைமையில் நடந்தது.                                                               

தூத்துக்குடி மாவட்டம்,நாசரேத் மற்றும் குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பில் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் செவ்வாய் கிழமை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை விவசாயிகளுக்கான ஆசீர்வாத ஜெபமாநாடு நடைபெற்றது. இதில் தேசிய வங்கிகளில் பணிபுரியும் அதிகாரிகள், விவசாய அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆலோசனகளை வழங்கினர். நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ. மோகன் சி. லாசரஸ் விவசாயிகளுக்காக சிறப்பு செய்தி கொடுத்து நிலங்களின் விளைச்சல் ஆசீர்வதிக்கப்படவும், விவசாயிகள் ஆசீர்வதிக்கப்படவும் சிறப்பு பிரார்த்தனையை ஏறெடுத்தார். நிலங்களின் சாபம் நீங்கி ஆசீர்வாதம் உண்டாக சிறப்பு ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. 

இலாபகரமான விவசாயம் செய்வதற்கான ஆலோசனைகள், இயற்கை விவசாய முறையில் காய்கறி தோட்டங்கள் அமைக்க ஆலோசனைகள், விவசாயிகளுக்கு அரசாங்கத்தால் கிடைக்கும் உதவிகள் குறித்த விபரங்கள், ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இலாபகரமாக விவசாயம் செய்து சாதித்த வர்களின் அனுபவ சாட்சிகள் இடம் பெற்றன. இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் அறங்காவலர் டாக்டர் அன்புராஜன் தலைமையில் ஊழியக் குழுவினர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads



Black Forest Cakes

Nalam Pasumaiyagam






selvam aqua



CSC Computer Education



Thoothukudi Business Directory