» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக பாஜகவின் அழுத்தத்தால் பொங்கல் பொது விடுமுறையாக அறிவிப்பு: தமிழிசை சௌந்தரராஜன்

புதன் 11, ஜனவரி 2017 10:13:06 AM (IST)

தமிழக பாரதிய ஜனதா கட்சியினரின் அழுத்தம் காரணமாகவே பொங்கல் பண்டிகையை பொது விடுமுறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

கோவையில், நேற்று நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழக பாஜகவினர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே மத்திய அரசு பொங்கல் பண்டிகையை விருப்ப முறையில் இருந்து பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. இதன் மூலமாகத் தமிழர்கள் உதாசீனப்படுத்தப்படவோ அல்லது புறக்கணிக்கப்படவோ இல்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்தால் மட்டும் போதாது. விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளை அறிந்து ஆறுகளைத் தூர்வாரி, மணல் அள்ளுவதைத் தடுக்க வேண்டும். மேலும், விவசாயிகளுக்கான காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றார்.

ஜல்லிக்கட்டு நடத்த சட்ட ரீதியான நடவடிக்கை

முன்னதாக அவர் விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், "தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த சட்ட ரீதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. ஆனால், அந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், சட்டத் திருத்தம் கொண்டு வந்தாலும் மத்திய அரசால் அனுமதி வாங்க இயலாது. ஆகவே, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசாணையைத் தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும். அவ்வாறு சட்ட விதிகளுக்கு உள்பட்டு நடப்பதற்கு மத்திய அரசும், தமிழக பாஜகவும் முழு ஒத்துழைப்பு அளிக்கும். அதையும் மீறி ஜல்லிக்கட்டு நடந்தால், அதற்கு உணர்வுப்பூர்வமாக ஆதரவு அளிப்போம் என்றார்.


மக்கள் கருத்து

ஜல்லிக்கட்டு விசுவாசிJan 11, 2017 - 04:55:23 PM | Posted IP 85.15*****

வுட்டுக்காரன் உன்ன சரியா அடக்க முடியல.........அதான் நீ இந்த குத்தாட்டம் போடுற.... இதுல நீ ஜல்லிக்கட்டு பற்றி பேசுற........ போடி முதல்ல உன்னோட பெயரை மாற்றுடி

azariahJan 11, 2017 - 04:11:50 PM | Posted IP 122.1*****

இது ஒரு லூசு பெண்

பாலாJan 11, 2017 - 11:33:49 AM | Posted IP 43.22*****

எல்லாம் எங்களுக்கு தெரியும் அடுத்த தேர்தல் வரை உங்களால் எவ்வளவு பேச முடியுமோ பேசிக்கொள்ளுங்கள்..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Universal Tiles Bazar

Nalam Pasumaiyagam

CSC Computer Education

New Shape Tailors

Sterlite Industries (I) Ltd


selvam aqua

Johnson's Engineers






Thoothukudi Business Directory