» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழர்களின் கலாசாரமாக இருந்தாலும் ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாது: கிரண்பேடி சொல்கிறார்!

புதன் 11, ஜனவரி 2017 12:03:08 PM (IST)

சென்னை தமிழர்களின் கலாசாரமாக இருந்தாலும் ஜல்லிக்கட்டை நடத்தக் கூடாது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் முழுவதும் வலுத்து வருகிறது. சென்னை, மதுரை, கோவை, சேலம், காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மாணவர்கள், இளைஞர்கள் ஒன்றிணைந்து பேரணி, ஆர்ப்பாட்டம், போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி புதுவை மாநிலத்திலும் சட்டக்கல்லூரி மாணவர்கள் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தினர். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் வலுப்பெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நடந்த இந்தியா டுடே குழுமத்தின் மாநாட்டில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கலந்து கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில், தமிழர்களின் கலாசாரமாக இருந்தாலும், ஜல்லிக்கட்டை நடத்தக் கூடாது. காளையை அடக்க முயற்சி செய்யும் போது காளைக்கும், அதைப் பிடிப்பவர்களுக்கும் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், ஜல்லிக்கட்டு சட்டரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு வேறு யாரும் தடை செய்யவில்லை என்று அவர் கூறினார்.


மக்கள் கருத்து

ஹா ஹாJan 11, 2017 - 04:58:25 PM | Posted IP 85.15*****

இந்தம்மா பேசாம பாண்டில சரக்கு அடிச்சுமா, இருந்துமோன்னு இல்லாம ஏன் தமிழ்நாட்டில மூக்க நீட்டுது

azariahJan 11, 2017 - 04:11:03 PM | Posted IP 122.1*****

தேவை இல்லாத விஷயத்தில் இந்த அம்மா தலைஇடுவதை நிறுத்த வேண்டும்

குமரன்Jan 11, 2017 - 02:42:03 PM | Posted IP 122.1*****

உன் வேலையினை மட்டும் பாரு. உன் லிமிட் பாண்டிச்சேரி மட்டும் தான்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Johnson's Engineers

crescentopticals




Friends Track CALL TAXI & CAB (P) LTD



New Shape Tailors






Thoothukudi Business Directory