» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பைரவா பட பிரச்சனை : கன்னியாகுமரி விஜய் ரசிகர் மன்ற தலைவர் தற்கொலை முயற்சி

வியாழன் 12, ஜனவரி 2017 10:58:04 AM (IST)

கேரளாவில் விஜய்யின் பைரவா படம் வெளிவராதோ என்ற அதிர்ச்சியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற குமரி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவரால் பரப்பரப்பு ஏற்ப்பட்டது .

கேரளாவில் திரையரங்கு உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக புதிய படங்கள் கேரளாவில் வெளியிடுவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் புதிய படங்கள் திரைக்கு வரும் போது அதில் வசூல் ஆகும் தொகையில் 60 சதவீதத்ததை தயாரிப்பாளரும் வினியோகஸ்தர்களும் எடுத்துக்கொண்டு மீதமுள்ள 40 சதவீதத்ததை திரையரங்கு உரிமை யாளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.இது போதாது தங்களுக்கு 50 சதவீதம் தர வேண்டும் என கோரிக்கை வைத்து திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கேரள திரையரங்குகளில் புதிய படங்கள் வெளியிட முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த பைரவா திரைப்படம் இன்று வெளியானது. கேரளாவில் விஜய்படத்திற்க்கு எப்போதும் பெரிய வரவேற்பு இருக்கும். இந்நிலையில் கேரளாவில் திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டத்தால் கேரளாவில் விஜய் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்ப்பட்டது. இந்நிலையில் விஜய் படம் கேரளாவில் வெளியிட முடியாத நிலை ஏற்ப்பட்டதை நினைத்து மன வருத்தமடைந்த கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தலைவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. கேரளா குமரி எல்லை பகுதியான களியக்காவிளை ஆர் சிதெருவை சேர்ந்த ஜோஸ்பிரபு (35). இவர் மேற்க்கு மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவராக உள்ளார். 

நேற்று அதிகாலை உறவினரின் வீட்டில் விஷம் குடித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஜோஸ் பிரபுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜோஸ்பிரபு வீட்டில் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை போலீஸார் கைப்பற்றினர். அதில் கேரளாவில் நடிகர் விஜய் நடித்த பைரவா படம் வெளியிடுவதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளதால் சாக போகிறேன் என எழுதியுள்ளார். 

இது தொடர்பாக களியக்காவிளை போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஷம் குடித்த ஜோஸ் பிரபுக்கு அனு(27) என்ற மனைவியும் ஜோசப் விஜய் என்ற மகனும் விஜிஷா என்ற மகளும் உள்ளனர். பைரவா படம் கேரளா மாநிலம் முழுவதும் 150 திரையரங்குகளில் வெளியிடுவதாக இருந்தது. தற்போது திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத திரையரங்குகளில் விஜய் படம் வெளியாகிறது .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

selvam aqua



Black Forest Cakes







CSC Computer Education


Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory