» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதன்முறையாக தமிழக சட்டப்பேரவை ஜன.23-ல் கூடுகிறது

வியாழன் 12, ஜனவரி 2017 11:49:10 AM (IST)

தமிழக சட்டப்பேரவையை வரும் 23-ம் தேதி ஆளுநர் கூட்டியிருப்பதாக சட்டப்பேரவைச் செயலர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், தமிழக ஆளுநர் இந்திய அரசமைப்பு பிரிவு 174(1)-ன் கீழ், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தை, 2017-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 23-ஆம் நாள், திங்கள்கிழமை, காலை 10.00 மணிக்கு, சென்னை - 600009, தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூட்டியிருக்கிறார்.

இந்திய அரசமைப்பு, பிரிவு 176 (1)-ன் கீழ், தமிழ்நாடு ஆளுநர் 2017-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 23-ஆம் நாள், திங்கள்கிழமை, காலை 10.00 மணிக்கு உரை நிகழ்த்த உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதன்முறையாக தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. இதனால், கூட்டத்தில் ஜெயலலிதா மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப் பட வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. மேலும், சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 5 நாட்கள் நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads



New Shape Tailors

Universal Tiles Bazar

Johnson's Engineers



Black Forest Cakes



Nalam Pasumaiyagam

selvam aqua

Panchai Dairy

CSC Computer Education



Thoothukudi Business Directory