» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தடையை மீறி தமிழத்தில் ஜல்லிக்கட்டை நடத்துவோம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

வியாழன் 12, ஜனவரி 2017 12:04:31 PM (IST)

தடை விதித்தாலும் அதனை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம் என முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

மாதவரம் மண்டல அலுவலகம் எதிரே  நடைபெற்ற "பாமக எதிர்நோக்கும் 2017 பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். மறுத்தாலும் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம். இதற்காக சிறை செல்லவும் தயார். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும். உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும் என்றார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு மாநில துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கோ.ரவிராஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் ஞானப்பிரகாசம் வரவேற்றார். மாதவரம் நகரச் செயலாளர் மா.பாஸ்கர் நன்றி தெரிவித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, மாவட்ட அமைப்புச் செயலாளர் தே.சண்முகம், மாவட்ட தொண்டரணிச் செயலாளர்கள் கா.விபூஷணன், பாமக நிர்வாகிகள் ஏழுமலை, ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads





CSC Computer Education

Black Forest Cakes





Nalam Pasumaiyagam

selvam aqua




Thoothukudi Business Directory