» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஓபிஸ் அறிக்கை விட்டாரா இல்லை குறட்டை விட்டாரா?- மத்திய, மாநில அரசுகள் மீது டி.ராஜேந்தர் சாடல்

வியாழன் 12, ஜனவரி 2017 12:23:44 PM (IST)

ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி கடைசி நேரத்தில்தான் தமிழக அரசு முயற்சி எடுத்தது என்று டி. ராஜேந்தர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அறிக்கைவிட்டாரா இல்லை குறட்டை விட்டாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொங்கல் நெருங்கி வரும் வேலையில் ஜல்லிக்கட்டுத் தொடர்பாக இடைக்காலத் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் மனு செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்ததோடு, ஜல்லிக்கட்டுத் தொடர்பான தீர்ப்பு எழுதப்பட்டுக் கொண்டிருப்பதால் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என்றும் திட்டவட்டமாக கூறிவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த முடிவிற்கு தமிழகம் முழுவதும் இருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.  இதுகுறித்து டி. ராஜேந்தர் கூறியதாவது: ஜல்லிக்கட்டு தொடர்பாக காங்கிரஸ் கட்சியை குறை கூறும் பாஜக, ஏன் ஜல்லிக்கட்டை நடத்த எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2 ஆண்டுகளாக இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஏன் காலதாமதம்? தமிழர்களை இளிச்சவாயர்கள் என்று நினைக்கிறார்கள். தமிழர்களை கிள்ளுக் கீரையாக கருதுகிறார்கள்.

தீர்ப்பு ஏன் எழுத தாமதமாகிறது? ஏன் முன் கூட்டியே எழுத முடியாதா? காளை மாட்டை ஏன் காட்சிப் பட்டியலில் வைத்திருக்கிறார்கள். அகற்ற வேண்டியது மத்திய அரசின் வேலை இல்லையா? அவசரச்சட்டம் கொண்டு வந்து நீக்காதது ஏன்? மத்திய அரசு ஏன் இத்தனை நாட்கள் காலம் கடத்தியது? கடைசி நேரம் காக்க வைத்திருந்துவிட்டு கழுத்தை அறுக்கும் வேலையை செய்துவிட்டார்கள். தமிழக முதல்வர் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று கோரி அறிக்கை விட்டார். அவர் அறிக்கை விட்டாரா அல்லது குறட்டை விட்டாரா என்பது தெரியவில்லை.

இத்தனை எம்பிக்களை வைத்துள்ள அதிமுக இத்தனை நாள் வரை என்ன செய்தது? ஜல்லிக்கட்டு விவகாரம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இதனை பச்சை தண்ணீர் ஊற்றி அணைக்க முடியாது. ஆக. ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்று டி. ராஜேந்தர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads




Nalam Pasumaiyagam

CSC Computer Education





selvam aqua


Black Forest Cakes




Thoothukudi Business Directory