» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக பொது செயலாளர் சசிகலாவுடன் தமிழ்த் திரைத்துறை பிரபலங்கள் சந்திப்பு

வியாழன் 12, ஜனவரி 2017 2:48:03 PM (IST)




எம்ஜிஆர் நுாற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு அதிமுக பொது செயலாளர் சசிகலாவை திரைத்துறையினர் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

எம்.ஜி.ஆர்.பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டு, தமிழ் நாடு திரைப்படத் துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் குறித்து, அதிமுக பொது செயலாளர் சசிகலாவை திரைப்பட இயக்குநர்களான பாரதிராஜா, பாக்யராஜ், தமிழ் நாடு திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன், பொதுச் செயலாளர் செல்வமணி, இணைச் செயலாளர் லிங்குசாமி, செயற்குழு உறுப்பினர்களான மனோஜ்குமார்,ரமேஷ் கண்ணா, ரங்கநாதன்; தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தலைவர் நாசர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு, சென்னை மாநகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன்; தமிழ் நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம், திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு சங்கத் தலைவர் செல்வின்ராஜ் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி டைமண்ட் பாபு உள்ளிட்ட அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளும் நேரில் சந்தித்தனர்.

அப்போது, தமிழ் நாடு திரைப்படத் துறையின் சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் நூற்றாண்டை ஒட்டி, ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவித்து, முதல் நிகழ்ச்சியில் சசிகலா கலந்துகொண்டு துவக்கி வைத்து சிறப்பிக்குமாறு தமிழ் நாடு திரைப்படத் துறையைச் சேர்ந்த அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளும் அழைப்பு விடுத்தனர்.


மக்கள் கருத்து

தமிழ்Jan 12, 2017 - 06:45:08 PM | Posted IP 85.15*****

எல்லா பயவுள்ளைகளும் கையகட்டிக்கிட்டு நிக்கிறாங்கய்யா.......... கேவலம் சசி இதுவரை தமிழ்நாட்டுக்கு என்ன பண்ணான்னு தெரியாமா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors



Johnson's Engineers


Black Forest Cakes

Universal Tiles Bazar


Pop Up Here

CSC Computer Education

Nalam Pasumaiyagam

selvam aqua




Thoothukudi Business Directory