» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசியல் கெட்டு விட்டதாக ஆதங்கப்படும் ரஜினி, ஸ்டாலினை புகழ்ந்தது ஏன்? தமிழிசை கேள்வி

வெள்ளி 19, மே 2017 5:47:00 PM (IST)

ஊழலுக்கு காரணமான ஸ்டாலினை ரஜினி புகழ்ந்தது ஏன்? என தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இன்று நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் பேசுகையில், மு.க.ஸ்டாலின் நல்ல திறமையான நிர்வாகி. சோ அடிக்கடி சொல்வார். ஸ்டாலினை மட்டும் சுதந்திரமாக செயல்பட விட்டால் மிகவும் நன்றாக செயல்படுவார். ஆனால் சுதந்திரமாக விடமாட்டார்கள் என்றார். மேலும் அன்புமணி ராமதாஸ், திருமாவளவன், சீமான் ஆகியோரையும் பாராட்டி பேசினார். 

ரஜினி காந்த் பேச்சுக்கு குறித்து கருத்து கூறிய, தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அரசியல் மாற்றம் தேவை என ரஜினி பேசியுள்ளது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் அரசியல் கெட்டு விட்டதாக ஆதங்கப்படும் ரஜினி தி.மு.க.வை பாராட்டி இருப்பது வியப்பாகதான் இருக்கிறது. ஊழலுக்கு காரணமான ஸ்டாலினை, ரஜினி ஏன் புகழ்ந்தார் என தெரியவில்லை. போருக்கு தயாராவது அவ்வளவு எளிதில் சாத்தியம் கிடையாது என்றார்.


மக்கள் கருத்து

சுடலைமே 20, 2017 - 01:08:35 PM | Posted IP 125.1*****

ரஜினி விவரம் தெரியாமல் பேசிவிட்டார் விடுங்கக்கா -தம்பி சுடலை (ஸ்டாலின் )

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads





selvam aqua




Universal Tiles Bazar



New Shape Tailors

Johnson's Engineers



Thoothukudi Business Directory