» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேல்மருவத்துாரில் ஆடிப்பூரவிழா கோலாகலம் : பங்காருஅடிகளார் பக்தர்களுக்கு ஆசி

புதன் 26, ஜூலை 2017 2:46:28 PM (IST)




மேல்மருவத்துாரில் ஆடிப்பூரவிழா கோலாகலமாக நடைபெற்றது. இவ் விழாவில் அருட்திரு பங்காரு அடிகளார் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

மேல்மருவத்துார் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஜூலை 25,26,27 தேதிகளில் ஆடிப்பூரவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கலசவிளக்கு, வேள்விபூஜை, கஞ்சி வார்த்தல் மற்றும் பால் அபிஷேக நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டுள்ளனர். விழாவினை முன்னிட்டு சித்தர்பீடம் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. நேற்று செவ்வாய்கிழமை அதிகாலை 3 மணிக்கு மங்கல இசையுடன் தொடங்கியது. கருவறையில் சுயம்புக்கும் ஆதி பராசக்திக்கும் சிறப்பான அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டன.

காலை 10.45 மணிக்கு சித்தர்பீடம் வந்த அருட்திரு பங்காரு அடிகளாரை மேளதாளம் முழங்க விழாப்பாெறுப்பாளர்கள் பாதபூஜை செய்து வரவேற்றனர். நேற்று மாலை 4 மணி முதல் அம்மனுக்கு வேண்டுதல் செய்த வர்கள் தீச்சட்டி எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றனர். தொடர்ந்து மாலை 4.45 மணிக்கு கலசவேள்வி விளக்கு பூஜையை லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார். இன்று காலை 6 மணியளவில் கஞ்சி தயாரிக்கப்படும் கேசவராயன்பேட்டை வளாகத்தில் இருந்து மண் கலயங்களில் புதிய கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியை ஆன்மிக இயக்க துணைத்தலைவர் கோ.ப.செந்தில்குமார் துவக்கி வைத்தார்.



இன்று காலை 6.45 மணியளவில் ஆன்மிககுரு அடிகளார் வீட்டிலிருந்து லட்சுமி பங்காரு அடிகளாரால் எடுத்து வரப்பட்ட தாய் வீட்டு கஞ்சிக்கு சித்தர் பீடம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்து.ஆன்மிககுரு அடிகளார் முன்னிலையில் தாய் கஞ்சி அம்மன் கருவறையில் படைக்கப் பட்டது. தொடர்ந்து பக்தர்கள் தங்கள் தலைமேல் கஞ்சி கலயத்தை வைத்தபடி பிரகாரத்தை சுற்றிவந்து கஞ்சி வார்க்கும் பள்ளி மைதான பகுதிக்கு சென்றனர். அங்கு அனைத்து பக்தர்களின் கஞ்சிகளும் ஒன்றாக வைக்கப் பட்டு விநியோகம் செய்யப்பட்டது. இதனை காளிதாஸ் துவக்கி வைத்தார். அன்ன பிரசாதம் வழங்குவதை ஆன்மிகஇயக்கதுணை தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் தொடங்கி வைத்தார்.

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் குறித்த நேரத்திற்கு முன்பே நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பால் அபிஷேக விழாவில் கலந்து கொள்ள 6 கிமீ துாரத்திற்கும் அதிகமாக பக்தர்கள் நின்றனர். அவர்களுக்கு குளிர்பானங்கள், மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்த பாலாபிஷேக விழா இரவு விடிய விடிய நடைபெறும் என சித்தர்பீட நிர்வாகிகள் தெரிவித்தனர். பக்தர்கள் பாதுகாப்பு பணியை ஆன்மிக இளைஞர் அணியினர் சிறப்பாக செய்திருந்தனர். பக்தர்களுக்கு கஞ்சி தயாரித்து வழங்கும் பணியினை மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, காஞ்சிபுரம், நீலகிரி மாவட்ட பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

விழா ஏற்பாடுகளை மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் கோவை, திருப்பூர் மாவட்ட ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற சக்திகள் முறையே கிருஷ்ணமூர்த்தி மற்றும் சரஸ்வதி சதாசிவம் தலைமையில் சிறப்பாக செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads



New Shape Tailors

crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD





Johnson's Engineers




Thoothukudi Business Directory