» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிக் பாஸ் வீட்டில் நடிகை ஓவியா தற்கொலை முயற்சி செய்தாரா? காவல்துறை சம்மன் அனுப்பியது..!!

சனி 12, ஆகஸ்ட் 2017 4:15:04 PM (IST)

பிக் பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடிகை ஓவியாவுக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

விஜய் டி.வி.யில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் நபர்கள் 100 நாட்கள் பிக் பாஸ் அரங்கில் தங்கியிருக்க வேண்டும். இந்நிகழ்ச்சியில் நடிகை ஓவியா என்ற ஹெலன் கலந்து கொண்டார். மக்கள் மத்தியில் ஓவியாவுக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், சில மருத்துவக் காரணங்களுக்காக ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். 

அவர் வெளியேறுவதற்கு முன்னதாக அரங்கில் அவர் தற்கொலைக்கு முயன்றதாக வழக்கறிஞர் ஒருவர் நாசரேத்பேட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் நடிகை ஓவியாவுக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த புகார் தொடர்பாக ஓவியாவின் அந்தரங்க காரியதரிசியிடம் விசாரித்ததாகவும் அவர் ஓவியா தற்கொலை முயற்சி செய்யவில்லை எனக் கூறியதாகவும் நாசரேத்பேட் காவல்நிலைய ஆய்வாளர் ஜெய்சந்திரன் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads





Johnson's Engineers

Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors




crescentopticals




Thoothukudi Business Directory